Thursday, July 8, 2010

அமெரிக்காவின் டீநெக் நகர மேயராக இந்திய அமெரிக்க முஸ்லீம் தேர்வு

Hammeduddin
வாஷிங்டன்: அமெரிக்கா [^]வில் யூதர்கள் அதிகம் வசிக்கும் டீனெக் நகர மேயராக இந்திய அமெரிக்கரான முஸ்லீம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயர் முகம்மது ஹமீதுதீன். ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தான் முகம்மதுவின் பூர்வீகம். இவர் நியூஜெர்சியில் உள்ள டீனெக் நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நகரில் யூதர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மேயர் பதவிக்கு வந்த ஒரு சில முஸ்லீம்கள் வரிசையில் முகம்மதுவும் இணைந்துள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில்தான் முகம்மது மேயர் பதவிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகரசபை உறுப்பினராக வென்றவர் முகம்மது. ஜூலை 1ம் தேதி நடந்த கவுன்சில் வருடாந்திர கூட்டத்தில் இவருக்கு ஆதரவாக 5 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் உள்ள வாக்குகள் எண்ணிக்கை 7 ஆகும்.

news by: oneindia.com

வாக்குகளை கவர்ந்துவரும் மமக! ..நக்கீரன்..



துபை மண்டலம் தமுமுக சார்பாக 6 வது இரத்த தான முகாம்


இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16 - 07 - 2010 வெள்ளிக்கிழமையன்று, முமுக – துபை மண்டலம் சார்பாக 6 வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம் : அல் வாசல் மருத்துவமனை, துபை
குறிப்பு : மருத்துவமனை செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் கொடுக்க விரும்புவேர் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்கள் : 055-4128182, 055-8963384, 050-3949142

Tuesday, July 6, 2010

கருவிலிருக்கும் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!


கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இதுத் தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில்,"கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும்,தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.

தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா ?

வாக்களர் பட்டியலில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை வேண்டும் என்றே சேர்க்காமல் விட்டுவிடும் போக்கு தொட்ரகிறது.அதே நேரத்தில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அலட்சிய போக்கோடு நடந்து வருகின்றனர்.நமது அரசியல் உரிமைகளை பெற நாம் வாக்களர் ஆவது முக்கியம்.எனவே உடனடியாக உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வோம்.மாணவரணியினர் இது குறித்து நோட்டீஸ் அடிப்பதோடு தனிநபர் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வாக்களர் பட்டியலில் பெயரை சேர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்.வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க
http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp

Saturday, July 3, 2010

ஜீலை 5 முழு அடைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் ஜீலை 5 அன்று நடத்தும் முழு அடைப்பிற்கு முழுமையான ஆதரவை அளிப்பதென இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்துள்ள எரிபொருட்களின் விலை ஏற்றம் ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக வஞ்சிக்கும் கொடும் நடவடிக்கை ஆகும். ஓரிரு இந்திய பெருமுதலாளிகளுக்கும், சில பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாக இந்த விலை ஏற்றம் அமைந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு அவசியமான ஒன்று என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

இந்த முழு அடைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு அனைவரையும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

விருத்தாசலத்தில் தீ விபத்து ம.ம.க உதவி



விருத்தாசலம் 26வது வார்டு பழமலை நகரில் இரண்டு வீடுகள் தீக்கு இறையாகின. இதில் பாதிக்கப் பட்ட நபர்களை விருத்தாச்சல மனிதநேய மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினர்.