Thursday, February 25, 2010

கட்டாய திருமணப் பதிவு சட்டம்: அனைத்து சமூக அமைப்புகள் கலந்தாய்வு

உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்டாய திருமண பதிவு சட்டத்தை நிறைவேற்ற வேண் டும் என மத்திய அரசு உத்திர விட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த தேவையான முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளது.


இச்சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால் முஸ்லிம் ஷரீத் சட்டத்தில் இடையூறு ஏற்படும் என முஸ்லிம் மக்களிடையே எழுந்துள்ள ஐயப் பாடுகளைப்பற்றி விரிவாக கலந்தா லோசிக்க ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் கடந்த 17.02.2010 அன்று சென்னை பிரெஸிடென்ஸி ஹோட்டலில் முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழக அரசு இயற்றி உள்ள சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இச்சட்டம் அமைய வேண்டும் என கோரிக்கை மனு தயார் செய்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனவும் மேலும் இச்சட்டம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலான அப்துல் ரஹ்மான், த.மு.மு.க தலைவர் பேரா.எம்.ஹச்.ஜவாஹிருல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் முகைதீன், தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமத், வேலூர் தொகுதி எம்.பி. அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், தமிழக தலைமை காஜி சாலவுதீன் அய்யூப் மற்றும் ஜமாஅத்தே இஸலாமிய ஹிந்த், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், தமிழ் மாநில தேசிய லீக், தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் முதலிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tuesday, February 23, 2010

பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது

இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது: பிரிட்டன் அமைச்சர்

இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸில் வேண்டுமானால் 'பர்கா'வுக்கு தடை விதிப்பது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அதற்கு இங்கு (இங்கிலாந்து) தடை விதிப்பது சாத்தியமில்லை என்றார்.

Tuesday, February 16, 2010

தலைமைச் செயலகம் முற்றுகை தமுமுக அறிவிப்பு


திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஷேக்மான்யம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தலைமை செயலகத்தை தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் 17-02-2010 அன்று முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அ­ தலைமை தாங்குகிறார்.

Sunday, February 14, 2010

கீழக்கரை தமுமுக ஆபீசில் வைத்து குடும்பம் இஸ்லாதை கொண்ட குடும்பம்


கீழக்கரை தமுமுக ஆபீசில் வைத்து குடும்பம் இஸ்லாதை கொண்ட குடும்பம் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் வழங்கப்பட்டன. கீழக்கரை தமு முக தலைவர் முஜீப் ரகுமான் உஸ்மான், முஸ்தகீன் ஆகியோர் பங்கேற்றனர்

Saturday, February 13, 2010

த.மு.மு.க. சார்பாக கீழக்கரை நடந்த விளையாட்டுப்




கீழக்கரை நடந்த விளையாட்டுப் போட்டியில் த.மு.மு.க. சார்பாக நினைஉ பரிசு வழங்கப்பட்டது. த.மு.மு.க மாவட்டசெயலாளர் தச்பிகு. மாவட்ட துணை செயலாளர் அன்வர் த.மு.மு.க. கீழக்கரை தமு முக தலைவர் முஜீப் ரகுமான் உஸ்மான், முஸ்தகீன் ராஜா ஹுசைன் மாணவரணி செயலாளர் அக்ரம் ஆகியோர் பங்கேற்றனர்