பொங்கல் விழா தமிழர் திருநாள் தானே. முஸ்லிம்கள் ஏன் அதை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை? பலர் இப்படி கேட்பதுண்டு. நமது கொள்கைக் கோட்பாடுகளை நன்கறிந்த ஒரு முஸ்லிமல்லாத கல்வியாளர் நம்மிடம் இவ்வாறு கேட்டார்.
திட்டங்களை அள்ளித் தெளித்து பணங்களை குவித்தது இந்த நிறுவனம்.
பொங்கல் திருநாளின் கோட்பாடுகள் என்ன என்று வினவினோம்.
* அறுவடையாகி வீடு வரும் புது நெல்லில் பொங்கல் செய்து, சுற்றங்கள், நட்புகளுக்கு விருந்தளித்து மகிழ்தல்,
* விவசாயத்திற்கு உதவிகரமான சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவித்தல்,
* உறவுகள் வளரும் வகையில் வீர விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி சமூக ஒருங்கிணைப்பை உண்டாக்குதல்,
* இவையெல்லாம் பொங்கல் விழாவின் பின்னணிகள் என்றார்.
அப்படிப் பார்த்தால், முஸ்லிம்கள் ஆண்டு முழுவதும் பொங்கல் கொண்டாடி வருகிறோம் என்றோம். அறுவடை நெல் வந்தாலும் வராவிட்டாலும், அண்டை வீட்டாருடன் உணவைப் பகிர்ந்து கொள்வது நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ள வழிமுறை.
ஆட்டின் குளம்பைக் கொண்டு குழம்பு வைத்தாலும் சற்று (தண்ணீரை சேர்த்து) அதிகமாக வையுங்கள். அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள் வதற்காக என்று நபிகள் நாயகம் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியுள்ள செய்தி வரலாற்றில் பதிவாகி யுள்ளது.
சென்னை போன்ற மாநகரங்கள் விவசாயத்திற்குச் சம்பந்தமில்லாத வாழ்க்கை முறைக்கு வழுக்கி விழுந்து விட்டன. கடையில் அரிசி வாங்கி இங்கும் பொங்கல் கொண்டாடப் படுகிறது. ஆனால் இங்குதான், அடுத்த வீட்டில் யார் வசிக்கிறார் என்று அறியாத கூட்டம் வாழ்ந்து வருகிறது.
அடுத்த கிரகங்கள் எல்லாம் அண்டை வீடுகளாகிவிட்ட இந்த அறிவியல் யுகத்தில் அண்டை வீடுகள் நமக்கு வேற்று கிரகங்கள் போல் விலகி விட்டன. இது மிக அவலமான சமூக விபத்து.
“அடுத்த வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறாற உண்பவர் உண்மை யான முஸ்லிம் இல்லை'' என்றார்கள் நபிகள் நாயகம். “அண்டை வீட்டார் யார்? என்று கேட்டதற்கு “உங்கள் வீட்டின் இரு மருங்கிலும் உள்ள 40 வீடுகளைச் சேர்ந்தோர் உங்களுக்கு அண்டை வீட்டார்தான்'' என்று நாயகம் விளக்கமளித்தார்கள்.
உணவையும், நல்லுணர்வையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு. அது எல்லா நாளும் தொடர வேண்டும். ஒருநாள் கொண்டாட்டத்தோடு முடிந்து விடாது.
சூரியனுக்கு நன்றியா?
சூரிய ஒளிதான் விவசாயத்திற்கு உதவுகிறது. மாடுகள் உழவுக்குப் பயன் பட்டன. ஆகவே அவற்றிற்கு நன்றி தெரிவிப்பது பொங்கலின் ஓர் அம்சம். நன்றி சொல்வது ஒரு மேன்மை மிகுந்த பண்பு. பழந் தமிழினம் மேன்மையான குணங்கள் நிரம்பிய இனம். ஆயினும் நாம் நன்றி சொல்வதை சூரியனோ, மாடுகளோ விளங்கிக் கொள்வதில்லை.
மாறாக, சூரியனையும், மாடுகளையும் படைத்த உன்னத இறைவனிடம் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவுக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டவர்கள் என்று உணர வேண்டும்.
மாடுகளைப் பூட்டி உழவு செய்த காலம் போய் இப்போது ட்ராக்டர் போன்ற கருவிகள் வந்துவிட்டன. மாட்டுக்கு நமது நன்றி புரியும் என்று மாட்டுப் பொங்கல் கொண்டாடினால், இப்போது ட்ராக்டருக்கு கொண்டாட வேண்டும்.
ஆண்டில் ஒருமுறை அறுவடை செய்தபோது தைப் பொங்கல். பலமுறை அறுவடை செய்யும் காலம் இப்போது வேளாண் புரட்சியால் விளைந்திருக்கிறது.
பொங்கலை ஒரு திருநாளாகக் கொண்டாடும் தமிழர்கள், அதன் விழுமி யங்களுக்குத்தான் விழா கொண்டாட வேண்டும்.
நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெரு நாளில் வீர விளையாட்டுக்களை நடத்தி யுள்ளார்கள். அவை வீரத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தருவ தாகத்தான் இருக்க வேண்டும். பிற உயிர்களை வதைத்து, இன்பம் காண் பதாக இருக்கக் கூடாது.
பொங்கல் என்பது மதப் பண்டிகை அல்ல, அது ஒரு விழா தான். ஆயினும் முஸ்லிம்கள் அதை விமரிசையாகக் கொண்டாடவில்லை என்ற கூற்றுக்கு சூரிய வழிபாடு போன்ற ஆரியக் கருத் துக்கள் பொங்கலில் ஊடுருவியது ஒரு காரணம்.
பொங்கலை முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திய நண்பர் இந்துத்துவ வெறியாளர் இல்லை. மதங்களைக் கடந்து மனிதர்கள் ஒன்று பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் உள்ளவர்.
முஸ்லிம்கள் எப்போதும் ஒற்றுமைக்கு உடன்பாடுடையவர்கள். பண்டைய வரலாற்றின் பக்கங்களே இன்றைய மக்களுக்கு இதை எடுத்துரைக்கும்.
-ஹாஜாகனி
Thursday, January 14, 2010
துபை முமுக வின் வாராந்திர(15-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், தமுமுக வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் J.S.ரிஃபாயி அவர்கள் சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு என்ற தலைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சிறப்புரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக அவருடைய வீடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு, அதற்கு பகரமாக முமுக துபை மண்டல தலைவர் சகோதரார் அப்துல் காதரர் அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முமுக வின் வாராந்திர(15-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், தமுமுக வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் J.S.ரிஃபாயி அவர்கள் சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு என்ற தலைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Monday, January 11, 2010
ஊடகங்களின் பார்வையில் தமுமுக தலைவருக்கு உள்துறை அமைச்சர் எழுதிய கடிதம்
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தமுமுக தலைவருக்கு எழுதிய கடிதம் தினமலர், டெக்கான் ஹெரால்ட், பி.டி.ஐ ஆகிய பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன.
Friday, January 8, 2010
கீழக்கரை மாணவர்களுக்கு தேசிய அளவிலான பரிசு
கீழக்கரை, ஜன. 7: நாசா அமைப்பு சார்பில் கட்டடக்கலை மாணவர்களுக்கு சென்னையில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் கீழக்கரை கல்லூரி மாணவர்கள் அர்பன் ரிடிசைன் என்ற போட்டியில் வெற்றிபெற்று தேசிய அளவிலான சிறப்புப் பரிசை பெற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா, நேபால், இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரி கட்டடக்கலை பிரிவு மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கைத் தொடர்ந்து பல பிரிவுகளில் கட்டடக் கலை தொடர்பான போட்டிகள் நடைபெற்றன. இதில் அர்பன் ரிடிசைன் என்ற போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கட்டடக்கலை மாணவர்கள் கலந்து கொண்டு தேசிய அளவிலான சிறப்பு பரிசை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் எ. செய்யது அப்தாகிர், கல்லூரி சேர்மன் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர், செயலாளர் எஸ்.எம். கபீர் சாகிப், சிறப்பு இயக்குநர் எஸ்.எம். யூசுப்சாகிப் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மனித நேய மக்கள் கட்சி சார்பாக திமுக கவுன்சிலர்யை கண்டித்து ஆர்பாட்டம் கோவையில்
கோவை புறநகர் பகுதியான குறிச்சி, நகராட்சி துனைத்தலைவரும், 1-வது வார்டு ஆத்துபாலம் பகுதி கவுன்சிலருமான இ.எம். அனிபாவை கண்டித்து 1-வது வார்டு பொதுமக்களும், மனித நேய மக்கள் கட்சியும் இனைந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது, 1-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் காலனியில் பாட்ட ஏற்பாடு செய்ய கோரி பலமுறை கூறியும் அதில் அசட்டையாக இருந்து. ஆத்துபாலம் பகுதியில் சாக்கடை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யாமை சாக்கடை சுத்தம் செய்யாதால் கடந்த 25-11-05 அன்று அசாருதீன் என்ற சிறுவன் டெங்கு காய்ச்சால் இறந்தது கூறியும் அசட்டையாக இருந்தது. 1-வது வார்டில் குப்ழபத்தொட்டி வைக்காமல் அதை 2-வது வார்டில் உள்ள மண்டபங்கள் முன்பு வைத்தது. டி.எ.ஹச்.காலனியில் பொது சுகாதாரக் கழிப்பிடம் 3 வருடமாகக் கேட்டும் ஏற்பாடு செய்யாதது, தெரு விளக்குகள் முறையாக அமைக்காமல் இருப்பது. குடிநீர் விநியோகம் சரிவர முறைப்படுத்தால் வார்டு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் 1-வது வார்டு, 2-வது வார்டு பகுதிகளில் ராஜ வாய்க்கால் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் திடீரென காலி செய்ய வேண்டும் என அச்சுறுத்துவதை நகராட்சி கண்டு கொள்வதில்லை.மேலும் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகபபடுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைளையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் நகர மக்களுக்கு வழங்க வேண்டும். என தழிழக அரசுயின் கவணத்திற்காக இந்த ஆர்பாட்டம் நடத்தபாட்டது.
இந்த ஆர்பாட்டதிற்க்கு அந்த பகுதி பொதுமக்கள் பெண்கள் மற்றும் தமுமுக, மனித நேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டார்கள். இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துனை செயலாளர் ஷாஜகான். தமுமுக மாவட்ட செயலாளர் ரபிக். இளைஞர் மாவட்ட செயலளாளர் அப்பாஸ். மற்றும் ஜபார். பாபு. அஜிஸ். ஹக்கிம். 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்
செய்தி,புகைப்படம் : கோவை தங்கப்பா

புதிய வரலாறு படைக்கும் அப்துற் ரஹிம் மருத்துவமனை
த மு மு க வின் மாநில செயலாளர் (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் பெயரில் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மருத்துவ மனை துவக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த சூழ ல் இந்த மருத்துவமனையின் சேவை குனியமுத்தூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மருத்துவமனையின் மருத்துவக்குழுவில் பி. வெங்கடாசலம் (அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவம்) திருமதி.மாலா வெங்கடாசலம் (மகப்பேரு மற்றும் பொது மருத்துவம்) டாக்டர். மானேக் ஆகிய 3 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலி யர்கள் உள்ளனர். மருத்துவமனையின் ஒரு பகுதியில் படுக்கை வசதியும், இன்னொரு பகுதியில் ஊசி மற்றும் மருந்துகள் வழங்கும் பிரிவும் இயங்கி வருகின்றது. ஒரு நாளைக்கு சராசரியாக 60 நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.
முஸ் லிம்கள் மட்டுமின்றி பிற சமுதாயத்தினரும் இம்மருத்துவமனைக்கு வந்து குறைந்த செலவில் சிகிச்சை செய்து கொள்ள தடையில்லை என்பதால் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சையினை மேற்கொள்கிறார்கள். எவ்விதமான பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையானது கோவையில் சிறப்பு மிக்க இடத்தினைப் பிடிக்கும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
.
மருத்துவமனை காலை 10 மணியி ருந்து பகல் 2 மணியளவிலும் பின்னர் மாலை 5 மணியி ருந்து இரவு 9 மணி வரையிலும் இயங்கி வருகின்றனது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்வை நேரம் அதிகப்படுத்துப் படுகின்றது.
அப்துர் ரஹிம் மருத்துவமனையானது லாப நோக்கத்தில் செயல்படாமல் சேவை நோக்கத்தினை மட்டுமே கருத்தாக கொண்டுச் செயல்பட்டு வருகிறது. குறைந்த கட்டணமே (ரூ. 20 மட்டுமே) இங்கு வசூ க்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை இங்குள்ள மருந்தகத்தில் கொடுத்து மருந்துகளை கொள்முதல் விலைக்கே பெற்று கொள்ளலாம்.
இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு மனிதநேய மிக்கவர்கள் நிதியுதவிகளை செய்வதன் மூலம் எக்ஸ்ரே, ஸ்கேனர், பல்வேறு அறுவைச் சிகிக்சைகள் கொண்ட அதிநவின மருத்துவமனையாக மாற்றிட இயலும்.
தமுமுகவின் எண்ணற்ற மனிதநேய சேவைக்கு புதிய வடிவத்தை இந்த அப்துர் ரஹிம் மருத்துவமனைப் பெற்றுத் தந்துள்ளது. இதனைப் பின்பற்றி இனி தமிழகமெங்கும் புதிய மருத்துவமனைகள் உருவாகுவதற்கு இது சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
-ராமேஸ்வரம் ராஃபி

Subscribe to:
Posts
(
Atom
)