Tuesday, November 24, 2009

இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி!

ரோம் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட லிபியா அதிபர் கடாபி, 200 இத்தாலிய பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற செய்தார்.

ரோம் நகரில் கடந்த வாரம் உணவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிபியா அதிபர் கடாபி வந்திருந்தார். லிபியா நிறுவனம் சார்பில் 200 அழகிய இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தனர். லிபியா தூதரகம், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடாபியை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 200 பெண்களும் வந்திருந்தனர். கடாபி உறுதி மொழி படிக்க அந்த பெண்களும் அந்த உறுதி மொழியை சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குரான் புத்தகம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் கடாபி இந்த கூட்டத்தில் பேசினார்.

இதுபற்றிய விரிவான கையேடு ஒன்று 200 பெண்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பெண்கள் குறிப் பிடுகையில், " இந்தகூட்டத்தில் கலந்து கொண்டால் சில ஆயிரம் ரூபாய் பணமும், லிபியா நாட்டு பரிசு பொருட்களும் கிடைக்கும், என கூறினார்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை' என்றனர்.

கடாபி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டனவாம். அதாவது, "ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை. அவர் இருந்த இடத்தில் யாரோ ஒரு நபர் இதேபோல இருந்துள்ளார்'என, இந்த கூட்டத்தில் பேசிய சிலர் தெரிவித் தார்கள், என மதமாறிய பெண்கள் தெரிவித்தனர்.

டெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் 68 பேருக்கு தொடர்புள்ளதாக லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

இதில் முன்னாள் பிரதமர் [^] வாஜ்பாய் [^], பாஜக மூத்த தலைவர் அத்வானி [^], சிவசேனா தலைவர் பால் தாக்கரே, 11 அதிகாரிகளும் அடக்கம். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேர் இப்போது உயிருடன் இல்லை.

900 கொண்ட இந்த கமிஷனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் விவரம்:

1. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)
2. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)
3. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
4. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
5.அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
6. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
7. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)
8. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
9. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
10. பால் தாக்கரே (சிவசேனா)
11. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
12. பரம் தத் திவிவேதி (உ.பி. வருவாய்த்துறை அமைச்சர்)
13. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)
14. தாவு தயால் கன்னா (பாஜக)
15. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
16. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)
17. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)
18. ஜி.எம்.லோதா (பாஜக)
19. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)
20. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)
21. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)
22. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)
23. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)
24. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி. மாநில தலைவர்)
25. கல்யாண் சிங் (உ.பி. முதல்வர்)
26. குஷபாவ் தாக்கரே (ஆர்எஸ்எஸ்)
27. லால்ஜி தண்டன் (உ.பி. மின்துறை அமைச்சர்)
28. லல்லு சிங் செளஹான் (பாஜக அயோத்தி எம்எல்ஏ)
29. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)
30. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)
31. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)
32. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)
33. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)
34.மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)
35. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)
36. ஓம் பிரதாப் சிங்
37. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)
38. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)
39. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
40. பிரபாத் குமார் (உ.பி. உள்துறை முதன்மை செயலாளர்)
41. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)
42. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)
43. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்எஸ்எஸ் தலைவர்)
44. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)
45. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)
46. ஆர்.கே.குப்தா (உ.பி. நிதியமைச்சர்)
47. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
48. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)
49. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர். இப்போது காங். மத்திய அமைச்சர்)
50. சதீஷ் பிரதான் (சிவசேனா)
51. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)
52. சிதா ராம் அகர்வால்
53. கெளர் (மாவட்ட ஆணையர்)
54. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)
55. சூர்ய பிரதாப் சாகி (உ.பி. அமைச்சர்)
56. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
57. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
58. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
59. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)
60. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)
61. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)
62. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)
63. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
64. விஜயராஜே சிந்தியா (பாஜக)
65. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)
66. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)
67. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
68. யோத் நாத் பாண்டே (சிவசேனா)

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பாக மனித நேய விழா நடந்தது...


தலைமை : நியாமத்துல்லாஹ்
37வது வார்டு கிளைச் செயலாளாளர் மனித நேய மக்கள் கட்சி

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி சிறப்புரை : சகோ . எம். தமிமுன் அன்சாரி மாநில துனைப் பொதுச் செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ. கோவை சாதிக் அலி
மாநில துனைச் செயலாளர் த மு மு க

சகோ. எ.கே.சுல்தான் அமீர்
கோவை மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ. அப்துல் பஷிர்
மாவட்ட தலைவர் த மு மு க

சகோ . ஆர் . எம். ரபிக்
கோவை மாவட்ட செயலாளர் த மு மு க

சகோ . டி. எம். எஸ். அப்பாஸ்
கோவை மாவட்ட பொருளாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ . அப்பாஸ்
கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

சகோ . ஹாலித்
திருப்பூர் மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

நன்றியுரை . அப்துல் ஹமீது
38வது வார்டு கிளை செயலாளர் மனித நேய மக்கள் கட்சி

புகைப்பட தொகுப்பு

மனித நேய மக்கள் கட்சி மாநில துனைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உரை

இஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி காட்சி

த மு மு க . மாநில துனைச் செயலாளர்
கோவை சாதிக் உரை

வியாபாரிகள் சங்கம் துவக்கி இனிப்பு வழங்கினர்

மனித நேய மக்கள் கட்சியின் கொடியை தமிமுன் அன்சாரி ஏற்றினார்

Sunday, November 22, 2009

இராமநாதபுரம் கீழக்கு மாவட்ட செயல் விரர்கள் கூட்டம்





தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் கீழக்கு மாவட்ட செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் தக்குவா பளளி நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைமை கழகப் பேச்சாளர் கோவை ஜாகிர் அவர்கள் சிறப்புறை ஆற்றினார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான்.


த.மு.மு.க மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா, செயலாளர் தஸ்பிக்அலி, பொருளாலர் சித்திக், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டிசம்பர் 6 போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.டிசம்பர் 6 போராட்டத்தில் அதிகமான மக்களை பங்குகொள்ளச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழக்கரை தமுமுக சார்பில் மாநலம் பதிக்க பைட்டா ஒருவருக்கு சுறு தொளில் புரிய தொளில் உதவி வழங்கப் பட்டன.

Saturday, November 21, 2009

தமுமுகவின் 15 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 15ஆம் ஆண்டு சாதனைகளை விளக்கும் வண்ணமாக சென்னை மணிக்கூண்டு தங்கசாலையில் 20/11/09 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் தலைமை தாங்கினார்.





தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மாநிலச் செயலளார் பி.எஸ். ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Friday, November 20, 2009

தமுமுக சார்பாக குடுசை பொட்டு கொடுக்கப்பட்டது.


கீழக்கரை மழையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கீழக்கரை தமுமுக சார்பாக குடுசை பொட்டு கொடுக்கப்பட்டது.