Friday, November 13, 2009

கோவை வணிக வளாக வெடிகுண்டு வழக்கு
அல்-உம்மா தலைவர் அன்சாரி உட்பட 10 பேர் விடுதலை தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பு

கோவை, நவ. 12லி கோவை கிளாசிக் டவர் அருகே வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி உட்படட 10 பேரை விடுதலை செய்து தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள கிளாசிக் டவர் அருகில் புதரில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி, சேட்டு என்ற சாந்துமுகம்மது, அப்துல் ஒசீர், முகம்மது பாசித், ஜஹாங்கீர்,யூசுப் ஷாஜகான், முகம்மது அலிகான் குட்டி, சம்ஜத் அகமது, நவாப்கான், ரியாசுல் ரகுமான். ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவாகள் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.கோவை தனி நீதிமன்றத்தில் வழக்ககு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் 42 பேர் சாட்சியம் அளித்தினர். இந்த வழக்கில் நீதிபதி கணேசன் இன்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் சரிவர குற்றங்கள் நிருபிக்கப்படாதால் 10 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த 10 பேரும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். இதில் யுசுப் ஷாஜகான் மட்டும் தண்டனை முடிந்து விடுதலையானார். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, November 11, 2009

காணமல் போன சிறுவனை மீட த மு மு க



(11/11/2009) கீழக்கரை. புது தெருவை சார்ந்த இம்ப்ரன் (8) அன்று காலை 11 மணிக்கும் தன வீட்டை விட்டு போன சிறுவனை காணவில்லை.
பின்பு பரமக்குடி த மு மு க நிர்வாகிகள் அந்த சிர்வனை மீடு கீழக்கரை த மு மு க நிர்வாகிகள் ஜெய்னுல்ஆப்தீன், முஜீப் ரகுமான், கபீர் மற்றும் பரமக்குடி நகர் தலைவர் கலீல் ஆகியோர் முன்னிலையில் தாய் இடம் சிறுவன் இம்ப்ரனை ஒபடைத்தனர்.

Sunday, November 8, 2009

கேரள அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கேரள அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கம்பம்,நவ.7: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் கம்பத்தில் ஏ.கே.ஜி. திடலில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் முஹமதுசாதிக் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அஜ்மீர்கான்ஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மாநில துணைச் செயலாளர் தமிமுன்அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் முஹமது கொளஸ் கேரள அரசைக் கண்டித்துப் பேசினர். தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் கேரள அரசுக்குப் புதிய அணை கட்ட நில அளவீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை கேரள அரசு கைவிட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். மீறினால் கேரளத்துக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மறைத்தும், உணவுப் பொருள்களைத் தடுத்தும் போராட்டம் நடத்துவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் 5மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.

Saturday, November 7, 2009

மண்டபம் பகுதியில் மனித நேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது





ராமமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து செல்லும் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கண் மூடித்தனமாக தாக்கி வருகிறார்கள். இதை கண்டித்தும் மண்டபம் பகுதியில் ம.ம.க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லா கான் தலைமை தாங்கினார்.கண்டன உரை ம.ம.க பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தலைமை கழக பேச்சாளர் சம்சுதீன். இராமநாதபுரம் மாவட்டம் த மு மு க நிர்வாகிகள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் ஜன்னல் வழியே குச்சியை நுழைத்து வீட்டில் துணிகர கொள்ளை :

ராமநாதபுரம் அருகே உள்ள கீழக்கரை மேல தெருவை சேர்ந்தவர் உமர் அப்துல்காதர், அவரது மனைவி அய்னுல் மர்லிகா. இவர் நேற்று இரவு தூங்க செல்லும் முன்பு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடினை கழட்டி ஜன்னல் ஓரம் வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட “மர்ம” நபர்கள் நைசாக ஒரு குச்சியை வீட்டுக்குள் நுழைத்தனர். பின்னர் அந்த வைரதோடை நகட்டி அதனை எடுத்து சென்று விட்டனர்.
இன்று காலை எழுந்து பார்த்த அய்னுல் மர்லிகா வைரதோடு காணாமல் போனது கண்டு பதறி போனார். இது குறித்து கீழக்கரை போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர் சங்கு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக் கரை பகுதியில் தற்போது தொடர் கொள்ளை நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.



04/11/2009 ன்று கீழக்கரை நகர் கூட்டம் நடந்தது. இதில் கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் பெயர்கள். மாவட்ட நிர்வாகிகள் இடம் புதிய நிர்வாகிகள் பெயர் வழங்க முடிஉ எடுக்கபட்டது