Wednesday, June 24, 2009

நக்கீரன் மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்-யைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நக்கீரன் மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்-யைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குறிப்பு : நக்கீரன் வார இதழில் காவல்துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்., இஸ்லாம் குறித்து மிக மோசமான அவதூறைச் சுமத்தியிருக் கிறார். இதற்கு தமுமுக கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. துணைப் பொது செயலாளர் ஜெ.எஸ். ரிபாஃயி அவர்கள் நக்கீரனுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார்.
நக்கீரன் 20.06.2009, தேதியிட்ட இதழின் முகப்புக்கட்டுரையான 'மகனைக் கொன்ற அப்பன், அப்பனைக் கொன்ற மகன் குற்றப்பின்னணி, என்ற கட்டுரையில் (பக்-7) காவல்துறை அதிகாரியும், இலக்கியவாதியுமான திருமதி திலகவதி யின் கருத்தை வெளியிட்டிருந்தது, திருமதி திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் கருத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகை யில் இருப்பதால் இவ்விளக்கத்தை எழுதுகிறோம்.
''குடும்பகௌரவத்தைக் காப்பாற்ற பெற்றோர்களே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல'' என்று கருத்துகூறியுள்ளார் திலகவதி.அரபு நாடுகளில் கௌரவக் கொலை கள் நடக்கின்றன என்பதற்கு அணுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக கௌரவக்கொலைகள் நடக்கின்றன என்பது அபத்தமான அவதூறு.
'சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல' என்ற நச்சுக்கருத்தை திலகவதி போன்ற நல்லிலக்கியவாதி வெளிப்படுத்துவது வேதனைக்குரியது.
இஸ்லாம் மார்க்கம் இத்தகைய கொலைகளை கொள்கையளவில் அங்கீ கரிப்பது போன்ற தோற்றத்தை திலகவதி ஏற்படுத்துகிறார்.
''இது அமைதி மார்க்கம்; இதில் எவ்விதமான நிர்பந்தமும் கிடையாது'' என்கிறது திருக்குர்ஆன். இறைக்கட்ட ளையையே நிர்பந்தப்படுத்தி ஒருவரை ஏற்கச் செய்ய இஸ்லாம் அனுமதிக்காத போது. தன்கருத்துக்கு ஒவ்வாத பிள்ளை யைக் கொல்வதற்கு எப்படி அனுமதிக்கும்?
பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகத்திற்கு முந்திய காலத்தில் அறியாமைக்கால அரபுகள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள். பெண் குழந்தை களை சாபக்கேடாகக் கருதினார்கள், இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு பெண்குழந்தைகளை இறை அருளின் அடையாளமாய் போதித்தார்கள். ''இருபெண் குழந்தை களை சிறப்பாக வளர்த்தவருக்கு சுவர்க் கம் உறுதி'' என்று நவின்றார்கள்.திருக்குர்ஆனின் 81 வது அத்தியாயத் தின் 8,9 வசனங்கள் பெண் சிசுக்கொலை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றன.
''குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களில்லை'' என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் இப்படி ஏராளமான சான்றுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
உண்மை இவ்வாறிருக்க பெற்ற பிள்ளை யைக் கொல்வது அந்த மதத்திற் குப் புதி தானது இல்லை என்ற திலகவதி யின் கருத்து வன்மையான கண்டனத்திற் குரியது.
''சொந்தப்பிள்ளையை அல்ல அநியாய மாக எந்த ஒரு மனித உயிரை எவர் கொன்றாலும் அவர் உலக மக்கள் அனை வரையும் கொன்றவர் போலாவார். ஒரு மனித உயிரை வாழவைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்'' என்று திருக்குர்ஆன் போதிக் கிறது. இத்தகையக் கட்டளைகளைக் கொண்டுள்ள மார்க்கத்தை கொலைகளை அங்கீகரிக்கும் மதமாக திலகவதி சித்தரித்துள்ளார்.
காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தனிவாழ்வில் ஒழுங்கீனமானவராக இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரும் அப்படிப்பட்டவர் களே என்று கூறமுடியுமா?
மகளின் மீது அதீதபாசம் வைத்திருந்த ஒருவர் தன் கண்முன்னால் மகள் சீரழி வதை சகிக்க முடியாமல். வெறியோடும் அறிவீனத்தோடும் செய்த கொலைக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போட்டதே முதலில் தவறு. இந்தக் கொலையை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. குற்றச் சம்பவத்தையும், அதைச் செய்தவர் களின் மதத்தையும் இணைத்துப் பார்ப்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே நடக்கிற கருத்தியல் வன் கொடுமை என்பதைச் சுட்டிக் காட்டு கிறோம். இரண்டு சம்பவங்கள் நடந் திருக்க, ஒரு சம்பவத்திற்கு மட்டும் மதத்தை முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயலா?
மஹாபாரதத்தில், 'என் உறவுகளை பதவிக்காக நான் கொல்லமாட்டேன்' என்று அர்ஜுனன் மறுக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருத்தாலும் அவர்களைக் கொலை செய்வது ஒரு ஷத்ரியனின் கடமை என்று போதிக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. இது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது.
பத்தொன்பது வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையான நடேசனைக் கொன்றுள்ளதற்கு கீதையை ஆதாரம் காட்டி தந்தையைக் கொல்வது இந்து மதத்திற்குப் புதியதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போடும் போக்கிற்கு முற்றுப் புள்ளிவைப் பது தான் சமூக ஒற்றுமைக்கு உதவும். திலகவதி தன்கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

Tuesday, June 23, 2009

பரமக்குடி தமுமுகவின் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா

பரமக்குடியில் த.மு.மு.க., சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சல்மான் தலைமை வகித்து,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, இலவச நோட்டு புத்தகத்தை வழங்கினார்.

நகர் தலைவர் கலிபத்துல்லா, நகர் செயலாளர் முகமது இஸ்மாயில், பொருளாளர் செய்யது இபுராகிம், ஒன்றிய செயலாளர் அப்பாஸ், இளையான்குடி பொருளாளர் உமர், சகுபர் சாதிக், இக்பால், தாஜீதின் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

Saturday, June 20, 2009

ஷார்ஜா-வில் இலவச மருத்துவ முகாம்




முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக இலவச மருத்துவ முகாம் 19.06.2009, வெள்ளிக் கிழமை அன்று நத்தானி மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமின் தொடக்கமாக மௌலவி.இஸ்மாயில் ஷா அவர்கள் கிராஅத் ஒத, அமீரக முமுக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா தமுமுக-வின் செயல்பாடுகளை எடுத்துரைத்து முகாமை துவக்கி வைத்தார்.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, பல் மருத்துவம் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் ஆகியவற்றை கண்டறியும் சோதனைகளும் செய்யப்பட்டன. நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளையும் இலவசமாகவே தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவற்றை மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர் மருந்தாளுணர் முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான மருந்தாளுணர்கள் கபீர், இல்யாஸ் ஆகியோர் வழங்கினர்.
முகாமின் இறுதியில் மருத்துவர்கள் தீபக் நத்தானி, சௌகத் அலி மற்றும் செவிலியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை சார்ந்த நோயாளிகள் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து பகுதியைச் சார்ந்தவர்களும், பாகிஸ்தானியர்களும், பங்களாதேச நாட்டவர்களும் திரளாக வருகைப் புரிந்து பயணடைந்தனர்.
மிகச் சிறப்பான ஏற்பாட்டினை மண்டல பொருளாளர் அபுல் ஹசன் மற்றும் துணைத் தலைவர் குலாம் தலைமையிலான குழுவினர்கள் செய்திருந்தனர். மருத்துவ சோதனைக்கான வளாகம், உபகரண ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா ஏற்பாடு செய்திருந்தார்.
மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு முமுக-வினால் அமீரகங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற மருத்துவ முகாம்களால் பொருளாதாரமின்மையால் அவதிப்படுபவர்கள் பயனடைவதாக கலந்துக் கொண்டவர்களின் கருத்தாக இருந்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!.

இராமநாதபுரம் தமுமுக ரூ. 50 ஆயிரம் நிதியுதவி


ராமநாதபுரம், ஜூன் 19: ராமநாதபுரத்தில் தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை, மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரையைச் சேர்ந்தவர் ராஜாஉசேன். இவர், மலேசியாவில் விபத்துக்குள்ளானார்.

இவரது குடும்பத்தினருக்கு ரூ. 25000, ராமநாதபுரம் சின்னக்கடையைச் சேர்ந்த முகம்மதுவின் கண் சிகிச்சைக்கு ரூ. 8000, வெளிப்பட்டினம் சகுபர் சாதிக்கின் இருதய சிகிச்சைக்கு ரூ. 5000, 6 மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவி மொத்தம் ரூ. 12000 உள்பட, ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான் தலைமைவகித்தார்.

மாவட்டச் செயலர் சாதிக் நிதியுதவியை வழங்கினார்.

மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர், மாவட்டத் தலைவர் சல்மான் (மேற்கு), நகர் தலைவர் சுல்த்தான், நகர் செயலர் பரக்கத்துல்லா, பொருளாளர் அப்துல்கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tuesday, June 16, 2009

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!




இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே! எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.


மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்
Dr, M.H. ஜவஹிருல்லாஹ், JAQH அமீர் மெளலவS. கமாலுதீன் மதனி மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு, உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய வட்டியில்ல கடன், படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள்.


லண்டனின் மாநாட்டிற்கு பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.



ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.



பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.



ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.



இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.


லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.

Saturday, June 13, 2009

லண்டனில் த.மு.மு.க தலைவர்






தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.




அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.