Saturday, July 26, 2014

உங்களது ஃபித்ராக்களை வழங்கி விட்டீர்களா?

உங்களது ஃபித்ராக்களை வழங்கி விட்டீர்களா?
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

Wednesday, July 23, 2014

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். . . த மு மு க கடும் கண்டனம்

ரமலான் நோன்பு வைத்து இருந்த மனிதரை கட்டாயபடுத்தி உணவு அருந்த வைப்பதா ? வரம்பு மீறிய சிவசேனா எம்பிக்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். 
. . த மு மு க கடும் கண்டனம் 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை 

டெல்லியில் உள்ள மகராஷ்டிரா மாநில இல்லத்தில் உணவு வழங்கல் மேற்பார்வையாளராக பணியாற்றும் அர்ஷத் என்ற சிறுபான்மை சகோதரர் மீது சிவசேனா எம்பிக்கள் வெறித்தனமாக, நாகரிக வரம்பு மீறி நடந்து கொண்டதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகளும், பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாத காட்டுமிராண்டி தனமானதாகும் இது வன்மையாக கண்டிக்க தக்கது, 
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளில் இது விவாதமாக மாறி இருக்கிறது.
ரமலான் நோன்பு வைத்து இருக்கும் உணவு வழங்கல் மேற்பார்வையாளர் அர்ஷத் க்கு சிவசேனா எம்பிக்கள் கட்டாயப்படுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்துள்ளதாக வெளியான தகவல் நாடுமுழுவதும் வாழும் அமைதி விரும்பும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

அனைத்து குடிமக்களுக்கும் முன்மாதிரியாக திகழவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விதம் வரம்பு மீறி நடந்து கொள்வது நாகாரீக உலகில் இந்திய திருநாட்டின் பெருமையை குலைத்து விடக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சம்பந்த பட்ட எம்பி வரம்பு மீறிய செயல் வீடியோ ஆதாரங்களாக வெளி வந்து இருக்கும் நிலையில் மத்திய அரசும் , நாடாளுமன்ற சபாநாயகரும் இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு குற்றம் இழைத்த சிவசேனா எம்பிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

ஜே எஸ் ரிபாயி 

தலைவர் தமுமுக

Monday, July 21, 2014

குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்த இராமநாதபுரம் தமுமுக



இன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் சாலைத்தெரு அருகில் ரோமன் சர்ச் பின்புறம் பிறந்து 3 நாளே ஆன பெண் குழந்தை யாரோ விட்டு சென்றனர் இதை பார்த்த பொதுமக்கள் தமுமுக விற்கு தகவல் கொடுத்தனர் உடனே சம்பவ இடத்திர்க்கு சென்ற தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மாவட்ட மருத்துவ சேவை அனி செயலாளர் யாசர் அரபாத் ஒன்றிய தலைவர் பாக்கர் அலி அவர்கள் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனை மூலமாக குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர் 

Sunday, July 20, 2014

திருப்புலானி ஒன்றியம் மேலப்புதுக்குடி தமுமுக கிளை சார்பில் இன்று நடைபெற்ற இப்தார்




இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருப்புலானி ஒன்றியம் மேலப்புதுக்குடி தமுமுக கிளை சார்பில் இன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேரா,டாக்டர்,M.H.ஜவாஹிருல்லாஹ்(தமுமுக மூத்த தலைவர்)அவர்களும் மாவட்ட தமுமுக நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்கள் இப்தார் நிகழ்ச்சியினை திருப்புலானி ஒன்றிய தமுமுக தலைவர் சகோ,ரைஸ் தலைமையில் மேலப்புதுக்குடி கிளை நிர்வாகிகள் சிரப்பாக செய்து இருந்தனர்

Friday, July 18, 2014

சிறுபான்மையினரின் தாய் மொழிப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும்: ஜவாஹிருல்லா


(18 Jul) சிறுபான்மையின மக்களின் தாய்மொழிப் பாட மதிப்பெண்களையும் தேர்ச்சிக்குக் கணக்கில் கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறினார்.சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியது:எனக்கு முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கோபிநாத்தும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரனும் தமிழகத்தில் சிறுபான்மையினர் மொழி எந்த நிலையில் உள்ளது என்பதை எடுத்துக் கூறினர்.அரசியலமைப்புச் சட்டம் 19 (ஏ), பிரிவு 29, பிரிவு 30-களின்படி, சிறுபான்மையின மக்களுக்கு அவர்களுடைய மொழியைப் பாதுகாப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இப்போது இந்த மக்கள் தமிழைக் கட்டாயப் பாடமாக கற்கவேண்டும் என்பதோடு, அவர்களின் தாய்மொழியையும் கற்கலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாய்மொழி மதிப்பெண், தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி, அரசியலமைப்புச் சட்ட உரிமையின்படி அவர்களின் தாய்மொழி மதிப்பெண்ணையும் தேர்ச்சிக்கான கணக்கில் 
எடுத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு தமிழ்ப் பாடத்தின் முதல் பகுதியை இரண்டாகப் பிரித்து, முதல் பிரிவில் செயல்பாட்டுத் தமிழையும், இரண்டாம் பிரிவில் சிறுபான்மையினரின் தாய் மொழியையும் சேர்க்க வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:சிறுபான்மையின மக்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்கும்போது, தமிழை கட்டாயப் பாடமாக படிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? தமிழைப் படித்தால்தான் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழை கட்டாயமாகப் படித்தே ஆகவேண்டும்.சிறுபான்மையினரில் ஒருசிலர் மட்டும்தான் தமிழைப் படிக்காமல் இருக்கின்றனர். இது சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதற்கு அடையாளம் என்றார்.
ஜவாஹிருல்லா: தமிழகத்தில் புதிய குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு பள்ளி, நூலகம் உருவாக்கப்பட வேண்டும்.அமைச்சர் கே.சி.வீரமணி: கடந்த மூன்று ஆண்டுகளாக புவியியல் அடிப்படையில் 300 மக்கள்தொகை கொண்ட பகுதியில் புதிய தொடக்கப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.இதுபோல் தேவைக்கேற்ப கடந்த 3 ஆண்டுகளில் 342 புதிய பகுதி நேர நூலகங்களையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
ஜவாஹிருல்லா: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதற்காக அமைக்கப்படும் தேர்வுக் குழுவில் யார் இடம்பெற்றுள்ளனர், இந்தக் குழுவிடம் எத்தனை பேர் விண்ணப்பிக்கின்றனர், விண்ணப்பித்தவர்களின் முழு விவரங்கள் ஆகியவை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும்.அமைச்சர் பி. பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடமுறைப்படி மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை.அதோடு, தேடுதல் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் மாறுபடும். இந்தத் தேர்வு என்பது யுஜிசி விதிமுறைப்படியே நடத்தப்படுகிறது. இதில் எந்த ஒளிவுமறைவும் கிடையாது.

Thursday, July 17, 2014

லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சட்டமன்றத்தில் மமக கோரிக்கை

முஸ்லிம் தமிழர்களின் ஆடையான லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சட்டமன்றத்தில் மமக கோரிக்கை

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வேட்டி அணிவதை தடைச் செய்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிகை தாக்கீடு அனுப்பபடும் என்றும் வேட்டி அணிவதை தடைச் செய்யும் மன்றங்களின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யும் வகையில் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்றும் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முனைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது 'தமிழர்களின் கலாச்சார ஆடையான வேட்டியை தடைச் செய்த கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிகையும் வேட்டி கட்டுவதை தடைச் செய்யும் மன்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரிலேயே சட்டமும் இயற்றப்படும் என்ற அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

இந்த சட்டத்தில் முஸ்லிம் தமிழர்களின் ஆடையான லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை காணப்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்

Saturday, July 12, 2014

பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு இரையாக்கி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்பாவி பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு இரையாக்கி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும்,
பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும்,

சென்னை உட்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் வரும் செவ்வாய் (15.07.2014) அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமுமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலைக் கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், நியாயத்திற்காக குரல் கொடுப்போரும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்குமாறு தமுமுக தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Wednesday, July 2, 2014

ஷார்ஜாவில் தமுமுக நடத்தும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஃப்தார்

ஷார்ஜாவில் தமுமுக நடத்தும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஃப்தார்


இடம் – தமுமுக மர்கஸ், நத்தானி மெடிக்கல் சென்டர் பில்டிங், 
நாள் – 04-07-2014 வெள்ளிக்கிழமை

தலைமை –

அண்ணன் ஹூசைன் பாஷா
(அமீரக துணை தலைவர் தமுமுக)

சிறப்புரை –

எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது
(இணைப் பொதுச்செயலாளர் ம.ம.க)

பத்திரிக்கையாளர் என்.தைமிய்யா
(கழக பேச்சாளர் தமுமுக)

நன்றியுரை தோப்புத்துறை அபுல் ஹசன்
மண்டல தலைவர் தமுமுக