Saturday, June 23, 2012

ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தாயார் வபாத் ஆனார்கள்

தமுமுக - மமக வின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தாயார் இன்று மேலப்பாளையத்தில் வபாத் ஆனார்கள்....
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
அவர்களின் ஜனாஸா நாளை (ஜூன் 24) காலை 10 மணிக்கு மேலப்பாளையத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....

Tuesday, June 19, 2012

கீழக்கரை நகர் கிளை தமுமுக சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது



கீழக்கரை நகர் கிளை தமுமுக சார்பாக கடந்த 18/06/2012 அன்று அனைத்து சமுதாய மாணவ மாணவியர் உள்ளிட்ட 260 பேருக்கு சுமார் ௪ரூபாய் 40000 மதிப்பிலான இலவச நோட்டு புத்தகங்கள்  மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ம.ம.க. செயலாளர் தாஸ்பீகு அலி தமுமுக தமுமுக மாவட் செயலாளர் அன்வர் அலி   தமுமுக ஒன்றியச் தலைவர் ரைஸ்  கீழக்கரை நகர் தலைவர் செஎது இபுராஹிம் .பொருளாளர் ஈஸி சதிக்கு செயலர் ராஜா ஹுசைன் இக்பால் கிளை நிர்வாகள் அனைத்து சமுதாய மாணவ மாணவியர் பொது மக்கள் கலந்து கொண்டனர்

Saturday, June 9, 2012

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

கீழக்கரை, ஜூன் 1: கடந்த மே 29-ம் தேதி கீழக்கரை புதிய பஸ் நிலையம் அருகே சலவைத் தொழிலாளிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள 6 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
 இத் தீ விபத்தை பார்வையிட்ட எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருள்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
 அப்போது அவர் கூறியது: கீழக்கரையில் பழுதடைந்துள்ள நூலக கட்டடத்துக்குப் பதிலாக அரசு இடத்தில் புதிய நூலக கட்டடம் கட்டப்படும். மேலும் கீழக்கரை தனித்தாலுகா அலுவலகம் அமைய மாவட்ட நிர்வாகத்துடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்