Friday, July 31, 2009

இலங்க-பேருவலை - மஹகொட மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்


இலங்க-
பேருவலை - மஹகொட

மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்


பேருவலை - மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது. பேருவளை, தர்கா டவ்ன் பகுதிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வீடுகளிலும், பொதுப் பள்ளிகளிலும் பல ஏச்சுப் பேச்சுகள், எதிர்ப்புக்கள், கல்லெறிகளுக்கு மத்தியில் தொடரப்பட்ட பிரச்சாரம்,

உண்மை உதயம் ஆசிரியரும், சகோதரர் தவ்பீக் மதனி அவர்களும் கடத்தப்பட்டுக் கர்ண கொடூரமாகத் தாக்கப்பட்டதன் பின்னர் புது வடிவம் பெற்றது. எமக்கெனத் தனிப் பள்ளிவாசல்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் பின்னர் தர்கா நகரில் தனிப் பள்ளிவாசல் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யாவினால் தனியான ஜும்ஆப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.


இவ்வாறே, பேருவளை சீனன் கோட்டை, மஹகொட
பகுதிகளிலும் தனி நபர் வீடுகளில் ஏகத்துவப் பிரச்சாரம்
முன்னெடுக்கப்பட்டு சைனா போர்ட்டில் பிரச்சினைகள்
எதுவும் இன்றி ஏகத்துவம் வளர்ந்து, ரியாளுஸ் ஸாலிஹீன்
ஜும்ஆப் பள்ளியாக மலர்ந்துள்ளது. மஹகொட பிரதேசத்தில்
பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரச்சாரம்
முன்னெடுக்கப்பட்டது. நவாஸ் ஹாஜியார் இல்லத்திலும்
மற்றும் பலரின் வீடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட
பிரச்சாரம், தகரத்தால் அமைக்கப்பட்ட தற்காலிகப்
பள்ளியில் முன்னெடுக்கப்பட்டது. ஒரு நாள் அதிகாலை ஸுபஹ்
தொழுதுகொண்டிருக்கும் போது தொழுகையாளிகளைக் கொலை
செய்யும் நோக்கில் கை குண்டு வீசப்பட்டு அல்லாஹ்வின்
அருளால் அந்த குண்டு வெடிக்காததினால் ஏகத்துவச்
சகோதரர்கள் உயிர் தப்பினர். படுகொலை முயற்சி நடந்த அதே
இடத்தில், ஜம்இய்யத் அன்ஸாரிஸ் சுன்னதில்
முஹம்மதியாவினால் ஷமஸ்ஜிதுர் ரஹ்மான்| என்ற பெயரில் இரு
மாடி கொண்ட பிரமாண்டமான மஸ்ஜிதும், அதை ஒட்டி இரு மாடி
மத்ரஸாவும், வாசகசாலையும், அத்துடன் சிறிய வைத்திய
நிலையம் ஒன்றும் 2002 இல் கிட்டத்தட்ட 12 மில்லியன்
ரூபா செலவில் அமைக்கப்பட்டு, அமைதியான முறையில் அந்த
மஸ்ஜித் சென்ற வெள்ளி வரை இயங்கி வந்தது.


23-07-09 அன்று அங்கு குத்பா உரை
நிகழ்த்தியவர் கந்தூரிக்கு எதிராகப் பேசியுள்ளார்.
புகாரிப் பள்ளியில் இஸ்லாத்தில் குறிப்பிடப்படாத
கந்தூரி செய்ய முடியுமாக இருந்தால், ஏகத்துவப்
பள்ளியில் கந்தூரிக்கெதிரான இஸ்லாமிய நிலைப்பாட்டைப்
பேசப் பூரண உரிமை உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதே
வேளை, மாற்றுத் தரப்பினர் தமது உரைகளில்
ஏகத்துவவாதிகளைக் கேவலமாக விமர்சித்து வருவதும்
குறிப்பிடத்தக்கதாகும்.


இதன் பின்னர் சிலர் வெள்ளி மாலை
மஸ்ஜிதுக்குக் கல்லெறிந்துள்ளனர். பின்னர் வந்த ஒரு
குழு கல்லெறிந்த மஸ்ஜிதைச் சேதப்படுத்தியது மட்டுமன்றி
ஒருவரைக் கத்தியாலும் குத்தியுள்ளனர்.


பின்னர் திட்டமிட்டு அரசியல்
பின்னணியுடன் காலியிலிருந்து காடையர்களை வரவழைத்துப்
பெரும் திரளாகப் பள்ளியைச் சூழ்ந்து பள்ளியைத்
தாக்கியுள்ளனர்.


அப்போது பள்ளியில் இருந்த 30 க்கும் 40
க்கும் இடைப்பட்ட சகோதரர்களின் மோட்டார் சைக்கிள்கள்,
புஷ் சைக்கிள்களை ஒன்றாகச் சேர்த்து எரித்துப்
பள்ளியைப் பற்ற வைத்துள்ளனர்.


பள்ளியின் அனைத்துக் கண்ணாடிகளையும்
உடைத்துக் காட்டு தர்பார் நடத்தியுள்ளனர். அங்கிருந்த
சகோதரர்களைக் கதறக் கதறக் கருவறுத்துள்ளனர். வுழூச்
செய்யுமிடத்தில் 6 இடங்களில் மாடு அறுத்தது போல்
காட்சியளிக்கும் இரத்த வெள்ளம், கலகக்காரர்களிடம்
கடுகளவு கூட இஸ்லாமிய உணர்வோ, ஈவு இரக்கமோ இல்லை
என்பதற்கான இரத்த சாட்சியங்களாகத் திகழ்கின்றன.
அத்துடன் மத்ரஸாவும், அதனுடனிருந்த அறபு இஸ்லாமிய
வாசிகசாலையும் எரிக்கப்பட்டுள்ளது. அறபுக் கிதாபுகள்,
குர்ஆன் பிரதிகள் எதுவும் இதயமற்றவர்களின்
கண்களுக்குப்படவில்லை.


அத்துடன் மக்களுக்கு மருத்துவ சேவை
வழங்கி வந்த மருத்துவ நிலையம் தகர்த்து
எரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களினதும்
அனைத்துக் கட்டமைப்புக்களும் கச்சிதமாகத்
தகர்க்கப்பட்டுள்ளன. காட்டு மிராண்டிகளின் காட்டு
தர்பாரில் இருவர் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 13 பேர் பாரிய வால், கத்தி வெட்டுக்
காயங்களுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வளவு அநியாயங்களும் சில மணி நேரங்களில்
அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நடந்து வரும்
தூரத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் கண்ணை
மூடிக்கொண்டிருந்துள்ளது. பல முனைகளில் முயற்சி
செய்யப்பட்டும் அவர்கள் அசையவில்லை.


கடமை தவறிய காவல் துறையும், அவர்களின்
கரங்களைக் கட்டிப் போட்ட அரசியல் அதிகாரிகளும்
சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே மக்கள்
கோரிக்கையாகும். இந்த அநியாயத்தைச் செய்தவர்கள், தூண்டி
விட்டவர்கள், துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளே!
தண்டிக்கப்படவேண்டியவர்களே! அவர்களுக்கு இந்த
உலகத்திலேயே உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க எமது
சகோதரர்களும், மனித நேயம் மிக்க நடுநிலை மக்களும்
பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர். இரண்டு உயிர்களுக்காக
என்றில்லாவிட்டால் கூட, அல்லாஹ்வின் கலாம் குர்ஆனைத்
தீயிலிட்டு அல்லாஹ்வை ஸுஜூது செய்த மாளிகையைக்
கேவலப்படுத்திக் காஃபிர்களை விட மோசமாக நடந்தவர்கள்
தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காகவாவது நடுநிலை
சகோதரர்களும், இது வரை கந்தூரிக்கு ஆதரவளித்து
வந்தவர்களும் தங்கள் நிலை பற்றிச் சிந்தித்து இந்த
அநியாயத்திற்கு எதிராக அணி திரளக் கடமைப்பட்டுள்ளனர்.


இதே வேளை, அந்த இரண்டு உயிர்கள்!
சிந்தப்பட்ட இரத்தங்கள்! எதுவும் அல்லாஹ்வின் முன் வீண்
போகாது!


இவர்களின் பண-பலமும், அரசியல்
அதிகாரமும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் முன்
அடிமைப்படும் நாள் வரும். இந்தக் கொடூரங்களுக்கெல்லாம்
பின்னால் நின்றவர்களை நிச்சயம் அல்லாஹ் தண்டிப்பான்
என்ற உறுதியான நம்பிக்கை நமக்குள்ளது. எனவே,
அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் இறுதி வெற்றி எமக்குக்
கிடைக்கும் என்ற அடிப்படையில் நாம் நிம்மதி பெறுவோம்.
அதே வேளை, இந்த உலகத்தில் அவர்களுக்கு உரிய தண்டனையைப்
பெற்றுக் கொடுக்கவும் பாடுபடுவோம்! அந்த விதவைப்
பெண்களின் கண்ணீரும், அனாதைகளாக்கப்பட்ட அரும்புகளின்
ஏக்கமும் நிச்சயமாக இவர்களை ஒரு நாள் எரித்துப் போடும்.
அங்கு தொழுகைக்காகக் கூடிய ஆயிரக் கணக்கான மக்களின்
அழுகையும், சாபமும் இவர்களுக்கு இவ்வுலகத்திலேயே
அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில்
அல்லாஹ்வை நம்பிய எமக்கு நம்பிக்கையுண்டு!


இவ்வேளையில் பாரபட்சமாக நடந்த பேருவலைப்
பொலிஸ் அதிகாரிகளையும், அநியாயத்திற்குத் துணை நின்ற
ஆன்மிக(?)-அரசியல் தலைமைகளையும், செய்தி ஊடகங்களில்
பிழையான தகவல்களைப் பரப்பிய (சன்டே டய்ம்ஸ் போன்ற)
ஊடகங்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் எமது சகோதரர்கள் பொறுமை காத்து நிதானமாகச்
செயற்படவேண்டும். எதையும் சட்ட ரீதியாகப்
பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அத்துடன்
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சிதைக்கப்பட்ட மஸ்ஜித்
குறித்து ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்துக்
காரியமாற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள
வேண்டும். இந்த நிகழ்வை நல்ல படிப்பினையாக எடுத்து எமது
தஃவாவை அமைதியாகவும், நிதானமாகவும் முன்னெடுக்க
வேண்டும். எமது உரைகள் அடுத்தவர்களுக்கு உண்மையை
உணர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர உள்ளங்களைக்
காயப்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. சத்தியத்தைச்
சொல்ல வேண்டும்ளூ அதை அழகிய வார்த்தைகளில் நிதானமான
நிலையோடு சொல்ல வேண்டும் என்ற பாடத்தைப் பெற்றுக்கொள்ள
வேண்டும்.


ஓரிருவரின் அவசரப் புத்தியும்,
அனுபவமும் அமைதியும் அற்ற நிலையும் எத்தகைய
பாதிப்பையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்து
விடும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும். இன்ஷா அல்லாஹ்!
இவர்களின் இந்த அக்கிரமம் பேருவலைப் பகுதியில் ஏகத்துவ
எழுச்சிக்கும், கந்தூரியின் வீழ்ச்சிக்கும் வழி
வகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! 'அல்லாஹ்வின்
மஸ்ஜித்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து,
அவற்றைப் பாழ்படுத்த முயல்பவனை விடப் பெரும்
அநியாயக்காரன் யார்? அச்சமுடையவர்களாகவே அன்றி அவற்றில்
நுழைவதற்கு அவர்களுக்குத் தகுமானதல்ல. அவர்களுக்கு
இம்மையில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.'
(2:114)


குறிப்பு:- மஹகொட, தர்கா நகர், சைனா
போர்ட் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று ஜும்ஆப்
பள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு மஸ்ஜிதுகள்
துயுளுஆ இனால் கட்டப்பட்டதாகும். 1990 களின் இறுதிப்
பகுதிகளில் இப்பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம்
முன்னெடுக்கப்பட்டது. இந்த வரலாறுகளையெல்லாம்
இருட்டடிப்புச் செய்து விட்டு, வுNவுது இணைய தளத்தில்
இலங்கை வரலாற்றில் இது வரை காலமும் எந்த ஆலிமும்
சொல்லாத அளவுக்கு அவர்களின் ஆலிம் சத்தியத்தை உடைத்துச்
சொல்லியிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளனர். 50
வருடங்களாக இலங்கையில் நடக்கும் ஏகத்துவப்
பிரச்சாரத்தைத் தமது ஏகபோக உரிமையாக மாற்ற
முற்பட்டுள்ளனர். இவ்வளவு தெளிவான விஷயத்திலேயே
இப்படிப் பகிரங்கமாகப் பொய் சொல்பவர்கள் தனிப்பட்ட
விவகாரங்களில் கூறும் செய்திகளை எவ்வாறு நம்ப முடியும்?
அவர்கள் குறிப்பிட்ட ஆலிம் சத்தியத்தைச் சொன்னாலும் அதை
முறைகேடாகக் கூறி இலங்கை வரலாற்றிலேயே இது வரை ஏற்படாத
ஒரு கறை படிந்த நிகழ்வுக்குக் காரணமாக அமைந்ததை இவர்கள்
பெருமையாகக் கருதுகின்றனர். சத்தியத்தைச் சொன்னவர்
துணிந்து கந்தூரி நடக்கும் இடத்துக்குச் சென்று
கூறியிருந்தால் அவரின் துணிவைப் பாராட்டியிருக்கலாம்.
அல்லது பேசி விட்டு பிரச்சினை நடக்கையில் களத்துக்குச்
சென்றிருந்தால் பாராட்டியிருக்கலாம். தான் பேசிய
பேச்சால் ஏற்பட்ட முறுகலால் கொலை செய்யப்பட்டவர்களையும்,
காயப்பட்டவர்களையும் பார்க்கவோ, இறந்தவர்களின்
ஜனாஸாவில் பங்கேற்கவோ, பொலிஸுக்கெதிராக நடந்த
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவோ முடியாமல் ஓடி
ஒழிந்தவர்தான் இலங்கை வரலாற்றில் இது வரையும் யாரும்
கூறாத அளவுக்கு சத்தியத்தைக் கூறியுள்ளாராம். வுNவுது
இலங்கையில் இரத்தம் சிந்தும் தஃவாக் களமொன்றை உருவாக்க
முயற்சிக்கின்றது. இதற்கு இலங்கை மக்களே நீங்கள்
இடமளிக்க விரும்புகிறீர்களா?

Thursday, July 30, 2009

கோவையில்.ரங்க நாத மிஸ்ரா ஆனையத்தை நாடாளுமன்றத்தில் அமல்படுத்தக் கோரி மாபெரும் ஆர்ப்பாடடம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில்
ரங்க நாத மிஸ்ரா ஆனையத்தை நாடாளுமன்றத்தில் அமல்படுத்தக் கோரி
மாபெரும் ஆர்ப்பாடடம். கோவையில்.......


Wednesday, July 29, 2009

இடைத் தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு


மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மனிதநேய மக்கள் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியவுடன் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு 2011ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகமெங்கும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. இச்சூழலில் தமிழக சட்டமன்றத்திற்கு ஐந்து தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் எவ்வித முக்கியத்துவமில்லாத தேர்தல் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்படுகின்றது.


இளையாங்குடி தொகுதியில் மனிதநேய கட்சி போட்டியிட வேண்டுமென மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுத்த அன்பு வேண்டுகோளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை சென்னையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறவுள்ள தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது

Sunday, July 26, 2009

வக்பு வாரிய சொத்துக்களை மீட்க தொடர் நடவடிக்கை* த.மு.மு.க., தலைவர் தகவல்

ஊட்டி : ""சென்னையில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன; இதே போன்று மாநிலம் முழுவதிலும் உள்ள சொத்துக்களை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என த.மு.மு.க., தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா, ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, பல்வேறு இடங்களிலும் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமான சம்பவங்கள் நடந்தன; ஓட்டுக்காக பணம் கொடுக்கும் முறைகேடுகளும் சிலரால் நடத்தப்பட்டன.தொழிற்நுட்பத்தில் நம் நாட்டை விட பலமடங்கு முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கூட, ஓட்டு இயந்திரம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட்ட தொகுதியில், எனக்கு ஓட்டு அளித்தவர்களுக்கு, "கை' சின்னம் தான் இரண்டு இடங்களில் பதிவானது. இதன்பின் தான் நான், முதன் முறையாக ஓட்டு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என புகார் அளித்தேன். அதன்பின் தான் பிற அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன.கடந்த 2004ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டது.

இதற்கான ஆய்வறிக்கை 2007ம் ஆண்டு மே 22ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டும், காங்கிரஸ் அரசு இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இதை வலியுறுத்தி, த.மு.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும் வரும் 10 நாட்களுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.பாபர் மசூதி தொடர்பான வழக்கு, வரும் டிசம்பர் வந்தால், 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனால், டிசம்பர் மாதத்துக்குள் இதன் தீர்ப்பை அளிக்க வேண்டும்.ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.

தமிழகத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து வரும் 1ம் தேதி சென்னையில் நடக்கும், நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.மாநிலத்தில் உள்ள வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதேபோன்று மாநிலம் முழுவதிலும் உள்ள சொத்துக்களை மீட்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, ஜவாஹிருல்லா கூறினார்.

Saturday, July 25, 2009

கம்யூனிஸ்டு கட்சி வற்புறுத்தல்: இளையான்குடி தொகுதியில் மனித நேய கட்சி போட்டியா?

இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.

இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அ.தி.மு.க. அறிவித்து விட்டது. பா.ம.க.,ம.தி.மு.க., புதியதமிழகம் கட்சியும் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.

மார்க்கிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சி தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பர்கூர், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியிலும் போட்டி யிடுவதாக அறிவித்துள்ளன.

இளையான்குடி தொகுதியை நட்பு கட்சிக்கு விட்டு கொடுப்பதாக வரதராஜனும், தா.பாண்டியனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இளையான்குடி தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

இது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இளையான்குடி தொகுதியில் மனித நேய கட்சி போட்டியிட வேண்டும் என்று இரு கம்யூனிஸ்டு கட்சியினரும் எங்களை அணுகி உள்ளனர்.

எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை உயர் நிலை குழுவில் விவாதித்து முடிவு செய்து அறிவிப்பதாக கூறி உள்ளோம்.

சென்னையில் விரைவில் எங்கள் கட்சியின் உயர் நிலை குழு கூடும். அதன் பிறகு முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

Friday, July 24, 2009

கீழக்கரை இரத்த தான முக ம் விளம்பரம்







த மு மு கவின்36 இரத்த தான முக ம் வரும் ஆகேச்ட் 15 அன்று ராமநாட டில் நடைபரும்.

Wednesday, July 22, 2009

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிய உச்ச நீதிமன்ற நீதிபதி





மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் சலீம் பத்தாம் வகுப்பு படிக்கும் இவன் இஸ்லாமிய முறைப்படி தாடி வைத்து பள்ளிக்கு சென்றான். நிர்மலா கான்வென்ட் என்ற இவனது பள்ளிக்கூட நிர்வாகம் கிருஸ்துவ நிறுவனத்தால் நடத்தப்படுவது. எனினும் சலீம் தாடி வைத்து கொண்டு வர பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை அடுத்து மத்திய பிரதேசத்தின் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் சலீம். ஆனால் உயர் நீதி மன்றமும் சலீமுக்கு அரசியல் சாசனம் வழங்கிய சட்ட உரிமைகளை அளிக்க தயாராக இல்லை. மத்திய பிரதேசத்தில் சங்க பரிவாரின் அரசியல் பிரிவான பிஜேபி தான் கடந்த 2004 லிருந்து ஆட்சியில் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. இதனால் நீதி கேட்டு உச்சநீதி மன்றத்தை அணுகினான் சலீம். சலீமுக்காக முன்னாள் நீதிபதியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பி.எ.கான் ஆஜரானார்.இவ்வழக்கு நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு (முன்னாள் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி) மற்றும் ஆர்.வீ. ரவீந்தரன் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது, நாடே இவ்வழக்கை ஆவலோடு பார்த்தது. ஆனால் வழக்கு விசாரணையின் போது நீதிபதி கட்ஜு கூறிய விமர்சனங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையே கொந்தளிக்க வைத்தது.முஸ்லீம்கள் தாடி வைப்பதை தலீபாநிசம் என்று கூறிய நீதிபதி தலீபாநிசத்தை நாட்டில் அனுமதிக்க முடியாது என்றார். இன்று தாடி வைக்க அனுமதி அளித்தால் நாளை முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்துதான் பள்ளி கூடம் செல் வேன் என்பார்கள் இதை அனுமதிக்க முடியாது என்றார்.மேலும் வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

இந்திய நாட்டின் சாதரண பாமரனும் கூற தயங்கும் ஒரு விமரிசனத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே வைத்தது முஸ்லீம் சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சி அலையை தோற்றுவித்தது.நாட்டில் உள்ள முஸ்லீம் சமுதாய அமைப்புகளும் சிறுபான்மை நலனில் அக்கறை கொண்டோரும் நீதிபதியின் கருத்தை வன்மையாக கண்டித்தனர். இந்நாட்டில் வாழும் மொழி மற்றும் மத சிறுபான்மை மக்கள் தங்கள் மொழியையும் மத கலாச்சாரத்தையும் பின்பற்றவும் பாதுகாக்கவும் பரப்பவும் உரிமை உள்ளவர்கள். இந்திய அரசியல் சாசன பிரிவுகள் இதை தெளிவாக கூறுகின்றன.

நாட்டில் வசிக்கும் சீக்கிய சிறுபான்மை மக்கள் இந்த நூற்றாண்டிலும் இடுப்பில் கத்தியை வைத்து கொண்டு பொது இடங்களில் நடமாடவும் தாடி வைக்கவும் தலைப்பாகை அணியவும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் இதே பிரிவுகளின் கீழ்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாடியும் டர்பனும் அணிந்த சீக்கியர்கள் காவல்துறையில்.ஏன் ராணுவத்தில் கூட பணியாற்றுகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் கூட தாடியும் டர்பனும் வைத்து கொண்டுதான் பணியாற்றுகின்றார். அவரை தலீபான்களின் பிரதிநிதி என்று நீதிபதி கூறுவாரா? தாடியை வைத்து கொண்டுதான் மன்மோகன் சிங் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படித்தார். இன்றும் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் முஸ்லீம்களின் அலீகர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற புகழ் பெற்ற பல்கலை கழகங் களில் படிக்கின்றனர்.சீக்கியர்களின் மத உரிமைக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் ஏன் முஸ்லிம் களுக்கு அளிக்கவில்லை. சட்டம் அளித்தாலும் அதை பாதுகாத்து செயல் படுத்த வேண்டிய நீதி மன்றமும் நீதிபதிகளும் ஏன் அளிக்க மறுக்கின்றனர்? என்பதை முஸ்லிம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதனால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கும் தொடரப்பட்டது.

மேலும், அகில இந்திய முஸ்லிம் பர்சனல் லா போர்டின் செயலாளர் மௌலானா முஹம்மது வலி ரஹ்மானி அவர்கள் தலைமையில் ஒரு குழு ஜூன் 24 அன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து நீதிபதியின் விமர்சனம் குறித்து உரையாடியது. (மன்மோகன் அவர்கள் சீக்கிய மக்கள் தாடி டர்பனுக்கு வைப்பதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்த பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத் தக்கது.) மேலும் இக்குழு மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மௌலியையும் சந்தித்தது.

இந்நிலையில் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் தன்னு டைய விமர்சனத்துக்கு மன்னிப்பு கோரிய தோடு மார்ச் 30 அன்று வழங்கிய தீர்ப்பையும் வாபஸ் வாங்கி கொண்ட தோடு, இவ் வழக்கை வேறு ஒரு நீதிபதி புதிய வழக்காக விசாரிக்க வும் கேட்டுக் கொண்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது தீர்ப்புக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. 1979ல் ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்த கருத்துக்கள் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்தையும் கொந்தளிக்க வைத்தது. அப்போதும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பிரச்சினையை கையிலெடுத்து போராடியது. அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு கண்டது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு முஸ்லிம்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக அமைந்தன. இதே போன்று முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளிலும் ஒன்று பட்டு போராடினால் வெற்றி நிச்சயம்.

Monday, July 20, 2009

நாடாளுமன்றத்தில் ரெங்கநாதன் மிஸ்ரா, லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் த.மு.மு.க. மாநில தலைவர் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் ரெங்கநாதன் மிஸ்ரா, லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என த.மு.மு.க. மாநில தலைவர் வலியுறுத்தி பேசினார்.

லிபரான் கமிஷன்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 67-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மனிதநேய விழா நேற்று சிவகாசியில் நடந்தது. இதையொட்டி முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்காக ரெங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த கமிஷனில் சிறுபான்மை மக்களுக்காக 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி போராட்டம் நடத்தும்.

இடைத்தேர்தல்

மேலும் நீண்டகால விசாரணைக்கு பின்பு பாபர்மசூதி இடிப்பு பற்றிய நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதை இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரிலேயே தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடை தேர்தல் நடைபெற உள்ளதால் அது பற்றி முடிவு எடுக்க மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் இடைத்தேர்தல் குறித்த கட்சியின் நிலைபாடு குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போத தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் அஜ்மீர் கான், மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமது, மாவட்ட பொருளாளர் முஸ்தபா, சிவகாசி நகர தலைவர் மாபுபாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கும் என்பதற்கு அடுத்த ஆதாரம்



நாக்பூர்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்ய முடியும். அது ஒன்றும் மோசடிகள் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பானது அல்ல' என்று, ஐதரபாத்தை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின், மின்னணு வாக்குப்ப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதன் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நெட் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரி கே.பிரசாத் என்பவரும், "எலக்ஷன் குரூப்' என்ற அமைப்பைச் சேர்ந்த வி.வி.ராவ் என்பவரும் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முன்பே புரோகிராம் செய்யப்பட்ட "சிப்'களைப் பொருத்துவதன் மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடிகள் செய்ய முடியும். இந்த வகை "சிப்'கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த "சிப்'களை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தி விட்டால், பதிவாகும் ஓட்டுக்களில் 60 சதவீத ஓட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு விழும்படி செய்ய முடியும். அதாவது பத்து ஓட்டுக்கள் பதிவானால், அதில் ஆறு ஓட்டுக்கள் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு கிடைக்கும்படி செய்யலாம். இதுபோன்ற பிரச்னை இல்லாத, பாதுகாப்பான வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க வேண்டும் எனில், இந்த இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தவறுகள் நிகழ்ந்தால் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்க வேண்டும். ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பதை காட்ட ரசீது வருவது போல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் தானாக ரசீது வரும் முறையை உருவாக்க வேண்டும் என்றனர்.

Sunday, July 19, 2009

புதுவை மாநிலத்தில் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் லியாகத் அலி, முதல்-அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியதை தொடர்ந்து த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் புதுவை அரசுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து, புதுவை அரசும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று மட்டும் வைத்திருப்பவர்களுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த புதுவை மாநில மக்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நாராயணசாமிக்கு வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்தார்கள்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.30 மானியத்தை புதுவை அரசு தற்போது திடீரென்று நிறுத்தியுள்ளது.

அரசின் இந்த செயலானது, மக்களை ஏமாற்றும் செயலாகவும், கண்டனத்திற்குரிய செயலாகவும் அமைந்துள்ளது. எனவே, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்டுள்ள மானியத் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், நிறுத்தப்பட்ட இடைக்காலத்தில் மானியம் இல்லாமல் சிலிண்டர் பெற்றவர்களுக்கு மானியத் தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் லியாகத் அலி கூறியுள்ளார்.

Friday, July 17, 2009

ரியாத் மாநகரில் நியு செனையா பகுதியில் ஒரு நாள் தர்பியா முகாம்!



கடந்த 10-07-2009 தேதி வெளளிக் கிழமையன்று ரியாத் மாநகரின் தொழிற் சாலை பகுதியான நியு செனையாவில் அல்சரக் கம்பெனி வில்லாவின் பள்ளி வாசலில் த.மு.மு.க - தாஃவா நியு செனையா கிளையின் சார்பாக ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் தர்பியா முகாம் இனிதே நடைபெற்றது.

மௌலவி ஹுசைன் சிராஜ் அவர்கள் கிராத் ஓத மௌலவி அலி உஸ்மான் அவர்கள் நாம் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய அழைப்புப் பணி (தாஃவா) குறித்தும், இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் உரையாற்றினார். இத்துடன் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.


மதிய உணவிற்கு பிறகு மௌலவி ஹியாத்துல்லாஹ் மற்றும் மௌலவி யுசுப் அவர்கள் தொழுகையின் அவசியம் மற்றும் சிறப்புகள் குறித்து எடுத்துரைத் தாரகள். த.மு.மு.க மத்திய மண்டலத்தின் தாஃவா பொறுப்பாளர் சகோ. ஜரஜிஸ் அவரகள் நாம் மனணம் செய்து தினமும் ஓத வேண்டிய துஆக்களையும் இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் விளக்கிக் கூறினார். அஸர தொழுகைக்குப் பிறகு ஈமானியச் சிந்தனை பற்றி பல விளக்கங்களுடன் மௌலவி செய்யது ஜமாலி சிறப்புரையாற்றினார். இடையி டையே கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் சொல்பவர்களுக்கு மார்க்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.


இறுதியாக சகோ. மீரான் நன்றியுரை யாற்ற மாலை தேநீருடன் இம்முகாம் இனிதே முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியை நியூசெனையா கிழக்கு பகுதி மற்றும் அல்சரக் பிளாஸ்டிக் வில்லா கிளையின் த.மு.மு.கவினர்களும் இணைந்து சிறப்பாக அனைத்து ஏற்பாட்டையும் செய்திருந்தார்கள். தர்பியா நிகழ்ச்சிக்கு நியூ செனையா பகுதியிலிருந்து 50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தம் வழக்கு: இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தகவல்


அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 80வது செயற்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கூடு நகரத்தில் கடந்த ஞாயிறு (ஜுலை 12ம்) தேதி நடைபெற்றது. வாரியத்தின் தலைவர் சைய்யது முஹம்மது ராபி ஹசன் நத்வி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்வும் பங்குக் கொண்டார்.


இக்கூட்டத்தில் பாபர் மஸ்ஜித் வழக்கு, லிபராஹான் குழு அறிக்கை, தாடி வைத்தவர்கள் அரசு பணியில் சேரும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள், ஒருபால் உறவு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.


பாபர் மஸ்ஜித் வழக்கு நிலைக் குறித்து அந்த வழக்கில் வாரியத்தின் சார்பாக ஆஜராகும் வழக்குறைஞர் ஜப்பர்யாப் ஜீலானி விவரித்தார். பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது என்றும் முஸ்லிம்கள் தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களும் முடிவடைந்து விட்டனவென்றும் இனி எதிர்தரப்பு விவாதங்கள் முடிவடைய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பாபர் மஸ்ஜித் தொடர்பான சில ஆவணங்கள் தொலைந்து விட்டதினால் அது தீர்ப்பை பாதிக்காது என்றும் அதில் இரண்டு முக்கிய ஆவணங்கள் ஏற்கெனவே சமர்பிக்கப்பட்டு விட்டன என்றும் அவர் தெரிவித்தார். பாபர் மஸ்ஜித் இடிப்பு குறித்து சி.பி.ஐ. தொடர்ந்த குற்றவியல் வழக்கு ராய்பரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது என்றும் இந்த வழக்கை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்கிட மத்திய அரசு ஆவணச் செய்ய வேண்டுமென்றும் ஜபர்யாப் ஜீலானி குறிப்பிட்டார்.


லிபரஹான் அணையத்தின் அறிக்கை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மக்களுக்கு பகிரங்கப்படுத்துவது அரசின் கடமை எனவும் வலியுறுத்தப்பட்டது.


ஒருபால் உறவுகளுக்கு தண்டனை வழங்கும் குற்றவியல் சட்டத்தின் 377ம் பிரிவை நீக்க வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வாரியம் கடுமையாக கண்டித்தது. ஒருபால் உறவுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை உறுதிச் செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வாரிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பிற மதத் தலைவர்களையும் இப்பிரச்னையில் ஒன்றிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


தாடி வைத்துள்ள காரணத்தினால் முப்படைகள் உள்பட சில அரசு துறைகளில் முஸ்லிம்களை பணியில் அமர்த்துவதில் உள்ள பாரபட்சத்தை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரை சந்திப்பது என்றும் தீர்மானிக்கப்ட்டது.


சிசு கொலை உள்ளிட்ட சமூக தீமைகள் குறித்து வாரியத்தின் சார்பாக தயாரிக்கப்பட்ட நூல்கள் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
வாரியத்தின் பொது அமர்வை லக்னோவில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து உலமா பெருமக்களும், முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டனர்.

Tuesday, July 14, 2009

தொண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்




தொண்டியில் தமுமுக, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனையும், சிகிச்சையும் பெற்றனர். மேலும் கண் ஆபரேஷன் செய்வதற்காக 30 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகாமை தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் சாதிக்பாட்சா, மனித நேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் வாணி சித்திக், மாவட்ட மாணவர் அணிச் செயலர் ஆசிக் அகமது, மாவட்ட துணைச் செயலர் அன்வர் அலி, ஒன்றியச் செயலர் சேக் முகம்மது, இணைச் செயலர் சம்சுதீன் முனவர், இளைஞர் அணிச் செயலர் அகம்மது பாய்ஸ், நகர தமுமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, July 11, 2009

தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்

தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்

மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களை உயர்வடையச் செய்வதற்காக தாங்கள் முஸ்லிம்களுக்கு என 3,5% சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கி கடந்த செப்டம்பர் 15/2007 -ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தீர்கள். அந்த ஆணையில் அந்தந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களுக்குரிய பிரிவில்தான் சேர வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வுகளில் OC(Merit Muslim)) பிரிவில் சேரக்கூடிய மாணவர்கள் அவர்களுக்குரிய கல்லூரிகள் கிடைக்கவில்லை என்பதால் முஸ்லிம்களுக்கு என வழங்கப்பட்ட BC (M) பிரிவில் ஒதுக்கப்படுவதாக அறியப்படுகிறது. இதனால், முஸ்லிம் மாணவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மருத்துவ படிப்பிற்கான தனி இட ஒதுக்கீடு இவர்களுக்கு மறுக்கப்பட்டு மருத்துவ படிப்பிற்கு செல்ல தடை ஏற்பட்டு சமூக நீதி மறுக்கப்படுகிறது.

ஆகவே முதல்வர் அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களுக்காக வழங்கப்பட்ட 3.5% சதவீத தனி இட ஒதுக்கீட்டில் வேறு பிரிவில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரிவில் சேரவும், BC (M) பிரிவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தர தாங்கள் ஆவணம் செய்யுமாறும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கின்ற அச்ச உணர்வை போக்கி சிறுபான்மை மக்களின் நலனை காத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம்


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்;
''நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எங்கள் நீண்டக் கால கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றிய நீங்கள் இந்த குளறுபடியையும் நீக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து உங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றிய சட்டத்தில் திறந்த போட்டி (ஒ.சி)க்கான தகுதியை பெறும் முஸ்லிம் போட்டியாளர்ளுக்கு ஒ.சி. ஒதுக்கீட்டில் தான் இடம் அளிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் ஓ.சி. ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் இடம் பெறும் காரணத்தினால் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை எந்த காரணத்தைக் கொண்டு குறைந்து விடக் கூடாது என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பான அவசர சட்டத்தின் விதி 5 குறிப்பிடுகின்றது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)இடஒதுக்கீடு தொடர்பான இந்த அரசாணையின் விதிமுறைக்கு முரணாக தற்போது மருத்துவ பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. ஓ.சி. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவ கல்லுரியில் ஒ.சி. பிரிவில் இடம் இல்லை என்று கூறப்பட்டு அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டிற்கு மாற்றிக் கொண்டால் அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லூரியில் இடம் தருகிறோம் என்று அறிவுறுத்தப்படுகின்றது. இவ்வாறு இடம் அளிக்கப்பட்டால் பிற்படுத்தபட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்படும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது வரை இந்த குளறுபடியின் காரணமாக பி.சி.எம். ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பட்டப்படிப்பில் சேரும் ஒட்டுமொத்தமான முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடுகின்றது.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இக்குளறுபடியை தீர்க்க உடனடியாக தலையிட்டு ஒ.சி. பிரிவில் தகுதிப் பெற்றுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைக்கும் அதே வேளையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைப்பதற்கும் ஆவண செய்யுமாறும் கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் ஏற்பட்ட குளறுபடியை திருத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, July 9, 2009

மதுரை தமுமுக அலுவலகத்தில் தீ விபத்து




மதுரை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் மதுரை தெற்கு வாசலில் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று முற்பகல் சரியாக 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இறைவனின் கிருபையால் இந்த தீ விபத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடனே தீ அணைக்கப் பட்டது.

தமுமுக அலுவலகம் அருகே உள்ள கோழிக் கடையில் உள்ள ஒரு மின் இயந்திர கோளாறு காரணமாக மின் கசிவு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

எனினும் மாவட்ட நிர்வாகிகள் சீனி, முகம்மது இப்னு, முபாரக் ஆகியோர் உடனே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் மதுரை தெற்குவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, July 8, 2009

ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்: லாலு பிரசாத்

ஓரினச் சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம். அதை அனுமதித்தால் சமுதாயம் சீரழிந்து விடும் என்று லாலு பிரசாத் ஆவேசமாக கூறினார்.

ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓரினச் சேர்க்கைக்கு எக்காரணம் கொண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்கக் கூடாது. அதை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். ஓரினச் சேர்க்கை என்பது ஒரு கிரிமினல் குற்றம். அந்த செயலை நம் நாட்டில் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் சமுதாயம் சீரழிந்து விடும். அதற்கு இடம் தரக்கூடாது. இது ஆபாசமான செயல். அது பற்றி மேலும் பேச விரும்ப வில்லை.

இது போன்ற செயல்களை நமது நாடும் நமது கலாசாரமும் ஏற்றுக் கொள்ளாது. இந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது. ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் அளித்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.

Monday, July 6, 2009

சீனாவில் சீனர்கள்-முஸ்லீம்கள் பயங்கர மோதல்: 140 பேர் பலி

உரும்கி (சீனா): சீனாவின் வட மேற்கில் உள்ள உரும்கி என்ற பகுதியில், முஸ்லீம்களான உயிகுர் இனத்தவருக்கும், சீனர்களான ஹான் பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 140 பேர் உயிரிழந்தனர்.

கடந்த பல ஆண்டுகளில் சீனாவில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரம் இது எனக் கூறப்படுகிறது. 800க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.

ஜின்சியாங் உயுகுர் சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில், நேற்று இரவு இந்த கலவரம் நடந்தது.

இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவ இடத்திலேயே 57 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.

சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்றார்.

வட மேற்கு சீனாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர். இங்கு பல்வேறு முஸ்லீம் குழுக்கள் தனி நாடு கோரி போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

அவர்களது மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்தப் பிராந்தியம் மோதல்களுடன்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அது பெரும் மோதலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோவையில் த மு மு க ஆர்ப்பாட்டம்


கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் கோவையில் 3-7-2009 அன்று மாலை 4-00 மணிக்கு காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு நடந்தது.

இதில் மாவட்ட தலைவர் அப்துல் பசிர் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சாகுல்ஹமிது, அகமதுகபிர், சேட், ரபிக் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அப்பாஸ், ஷாஜகான், பர்கத்அலி, கோவை தங்கப்பா, அப்பாஸ், ஹக் மற்றும் மாநகரம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இறுதியில் மாவட்ட பேச்சாளர் முஜிப்புர்ரஹ்மான், ஜாக் நிர்வாகி சித்திக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

செய்தி-படம், கோவை தங்கப்பா

Saturday, July 4, 2009

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக 06.07.2009 ல் தமுமுக நடத்தும் ஆர்ப்பாட்டம்


ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்ய முயலும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - 06.07.2009 அன்று மாலை 4.00 மணிக்கு – சென்னை சென்ரல் மெமோரியல் ஹால் அருகில் - அனைவரும் வருக – அழைக்கிறது தமுமுக.

துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர்


துபாய் : துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார்.

இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர்.

அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினைவிழ‌ந்த‌ நிலையில் சிகிச்சை பெற்று வ‌ரும் த‌க‌வ‌ல் அறிந்து அவ‌ரைப் பார்த்து வ‌ந்த‌ன‌ர்.

இவ‌ர் யார் என்ப‌த‌ற்கான‌ எவ்வித‌ சான்றுக‌ளும் அவ‌ரிட‌ம் இல்லாத‌ நிலையில் ம‌ருத்துவ‌ம‌னியில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ரைப் பார்க்கையில் த‌மிழ‌க‌ம், கேர‌ளா, ஆந்திரா உள்ளிட்ட‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ராக‌ இருக்க‌லாம் என‌ க‌ருத்த‌ப்ப‌டுகிற‌து.

த‌மிழ் பேசும் போது ம‌ட்டும் இவ‌ர‌து பார்வை மேலும் கீழும் வ‌ருகிறது. என‌வே இவ‌ர் குறித்து த‌க‌வ‌ல் தெரிந்தால் ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்ல‌து muduvaihidayath@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அவ்வாறு த‌க‌வ‌ல் கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் இவ‌ர் ப‌த்திர‌மாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தாரிட‌ம் சேர்ப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும்.