Wednesday, February 25, 2009

மண்டபத்தில் கல்விக் கருத்தரங்கம்

மண்டபத்தில் கல்விக் கருத்தரங்கம்

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் மண்டபத்தில் 21.02.2009 அன்று கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட மாணவரணிச் செயலாளர் அபுல் ஹசன் தலைமை வகித்தார். கர்னல் சேக் அப்துல் காதர். எஸ்.ஆர்.ஏ கம்யூட்டர்ஸ் ஹாஜா அஜ்மீர்தீன். ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மாநிலத் துணைச் செயலாளர் பேரா. ஹாஜாகனி சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினார். திரளான மாணவ, மாணவியர்கள் இதில் பங்கேற்றனர்.

தமுமுக மாணவரணியின் கலந்தாய்வுக் கூட்டம் 21.02.2009 அன்று மாலை மண்டபம் பள்ளிவாசல் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. ஆதிக்க சக்திகளின் வியூகங்களும், மாணவர்களின் கடமைகளும் என்ற தலைப்பில் நடந்த இந்த கலந்துரையாடலில் மாநிலத் துணைச் செயலாளர் பேரா. ஹாஜாகனி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். மாவட்ட மாணவரணியினர் மற்றும் மண்டபம் ரசூல்கான், அன்வர், ஷமிம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

Tuesday, February 24, 2009

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் நியமனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் நியமனம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக பின்வரும் சகோதரர்கள் தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு நியமனம் செய்துள்ளது.


ஏனைய ம.ம.க தலைமை நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.



துணைப் பொதுச் செயலாளர்
எம் . தமீமுன் அன்சாரி


மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எம். தமிமுன் அன்சாரி 32 வயது நிரம்பியவர். 1990 முதலே சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாபரி மஸ்ஜித் தொடர் பான விஷயங்களும், பழனிபாபாவின் உரைவீச்சுக்களும் இவரது கவனத்தை ஈர்த்த நேரத்தில் 1990ல் நிகழ்ந்த வளைகுடா யுத்தம் இவரை நேரடியாக அமெரிக்க எதிர்ப்புப் பிரச்சாரம் மூலமாக சமுதாயப் பணிக்கு வந்தார். 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது சக நண்பர்களோடு முஸ்லிம் மாணவர் முன்னணி என்ற அமைப்பை தொடங்கி நடத்தினார்.


நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்த எம். தமிமுன் அன்சாரி சென்னை புதுக்கல்லூரியில் 1995ல் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கையில் தமுமுகவில் இணைந்தார். பின்னர் தமுமுகவின் மாணவரணிச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றினார். 1997ல் புதுக்கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் பெருவாரியான வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல் மாணவரணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவரணி நிர்வாகி களாக இருந்த ஹாரூண், இஸ்மத், ஹாஜாகனி, தைமிய்யா உள்ளிட்ட நிர்வாகிகளோடு தமிழகமெங்கும் 10 கல்லூரிகளில் மாணவரணியை உருவாக்கினார்.


2001ல் தமுமுகவின் மாநிலச் செயலாளராக கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப் பட்டு, தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்து வருகிறார். தமுமுக சார்பாக அமீரகம், குவைத், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சிறந்த மேடைப் பேச்சாள ரான இவர் கவிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கு கிறார். தற்சமயம் மக்கள் உரிமை ஆசிரியராக இருக்கின்றார்.


அமைப்புச் செயலாளர்கள் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன்

தமுமுகவின் தொடக்கத்தில் வடசென்னை மாவட் டத் தலைவராக இருந்து, பிறகு 7 மாவட்டங்கள் உள்ளடங்கிய வட தமிழக மண்டலத் தின் பொறுப்பாளராக செயல்பட்டார். பிறகு 2001 முதல் 2007 வரை தமுமுகவின் மாநிலச் செயலாளராக செயல்பட்டார். களப் பணிகளில் சீரிய அனுபவம் கொண்ட இவர் வணிகராக இருக்கிறார்.


கே. முஹம்மது கவுஸ்

மதுரையை சேர்ந்த கே. முஹம்மது கவுஸ், தமுமுக வில் கிளை நிர்வாகி முதல் மாநிலச் செயலாளர் வரை பொறுப்புகளை வகித்தவர். சிறந்த பேச் சாளரான இவர் சீரிய களப் பணியாளராக வும் இருக்கிறார். தற்சமயம் தமுமுகவின் மாநிலச் செய லாளராக இருக்கும் இவர், மதுரையில் வணிகம் செய்து வருகிறார்.


மவ்லவி சம்சுதீன் நாஸர் உமரி

வேலூர் நகரத்தைச் சேர்ந்த மவ்லவி சம்சுதீன் நாஸர் உமரி, ஜாமிஆ தாருஸ்ஸலாம் உமராபாதில் பயின்று ஆலிம் பட்டம் பெற்றவர். வர்த்தகரான இவர் வேலூரில் பல சமூக சேவை நிறு வனங்களுடன் இணைந்து சமூக சேவை யாற்றி வருகிறார். வேலூ ரில் இயங்கும் நஸாயீ ஆங்கிலலிஅரபி பள்ளிக் கூடத்தின் தாளாளராக தற்சமயம் இருந்து வரு கிறார். தமுமுகவின் வேலூர் மாவட்ட உலமா அணிச் செயலாளராக வும் இருந்த இவர் தற்போது மாநில உலமா அணி பொருளாளராகவும் சேவை செய்து வருகிறார். உருது மொழியில் சிறந்த பேச்சாளராகவும் இவர் இருக்கிறார்.

தலைமை நிலையச் செயலாளர் டி.ஏ. முஹம்மது இஸ்மாயீல்


தமுமுகவின் தொடக்க காலம் முதல் அதில் இணைந்து சேவையாற்றி வரும் இவர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2007 முதல் தமுமுக வின் துணைச் செயலா ளராக சேவையாற்றி வரு கிறார். தமுமுக தலைமைக் கழகத்தில் செயல்படும் ஷரீஅத் சமாதானக் குழு வில் நீண்டக்காலம் நிர்வாகியாக இருந்த இவர் 2004 முதல் அதன் தலைவ ராகவும் இருந்து வருகிறார்.

Monday, February 23, 2009

வரலாற்றை எங்கள் திசையில் இழுத்து போவோம்!

வரலாற்றை எங்கள் திசையில் இழுத்து போவோம்!
மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி

மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி மாற்று அரசியலுக்கான முன் முயற்சி என்ற முழக்கத்தோடு கூடியிருக்கும் சகோதர... சகோதரிகளே...

வரலாறு மீண்டும் திரும்புகிறது. வஞ்சிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை கைப்பற்ற கூடியிருக்கிறார்கள்.

நாங்கள் கூடியிருப்பது கலைவதற்காக அல்ல... அணி திரள்வதற்காக...
தாம்பரத்தில் தொடங்குகிறோம் விரைவில் டெல்லியில் நமது கொடி பறக்கும்...

இன்று செங்கோட்டை மேடையில் இருக்கிறோம்...

அடுத்து செயின் ஜார்ஜ் கோட்டையில் உட்காருவோம்...

மாவோ சீனாவில் நீண்ட பயணத்தை நடத்தினான்.

சீனாவில் ஆட்சி மாற்றம் நடந்தது.

சேகுவேரா படை நடத்தினான். க்யூபாவில் ஆட்சி மாற்றம் நடந்தது.

நெல்சன் மண்டேலா குமுறி எழுந் தான் தென்னாப்பிரிக்க வரலாறு மாறியது

இதோ...மனிதநேய மக்கள் கட்சி புறப்படு கிறது. இந்தியாவின் சரித்திரம் மாறப் போகிறது

வரலாற்றை அதன் திசையில் அல்ல..

எங்கள் திசையில் இழுத்துப் போக றோம்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிரித்தவர்கள் என அரசியலை பிரித்தவர்களின் ரதமும் ஓடாது.. இனி ரத்தமும் ஓடாது...


இனி சமூக நீதி அரசியலை, சமூக நல்லிணக்க அரசியலை வழி நடத்துவோம்..


நாங்கள் தடம் மாறவில்லை... புதிய தடத்தை பதிக்கிறோம்...


பாதைகளை மாற்றவில்லை... குதிரை களை மாற்றுகிறோம்...


இந்தக் கூட்டம் ஒன்றை தெளிவாக பிரகடனம் செய்கிறது.


சிலர் வடக்கே இருப்பார்கள், தெற்கே இருக்கமாட்டார்கள்...


தெற்கே இருப்பார்கள் வடக்கே இருக்க மாட்டார்கள்.


ஆனால் மனிதநேய மக்கள் கட்சி தொடங்கும் போதே 30 மாவட்டங்களிலும் வலுவோடு தொடங்குகிறது.


எனவே தமிழ்நாட்டிலே 5வது பெரிய கட்சி மனிதநேய மக்கள் கட்சி தான். இனி போயஸ் தோட்டமும், கோபாலபுரமும் வடமரைக்காயர் தெருவை புறக்கணித்து விட்டு அரசியல் செய்ய முடியாது! நாடாளுமன்ற தேர்த­ல் முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதிதான் என்ற நிலையை மாற்றுவோம். நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கும் கலாச்சாரம் முடிந்து 3மணி நேரமாகிவிட்டது. மத்திய சென்னை, ராமநாதபுரம், வேலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நெல்லை என ஆறு தொகுதிகளை குறிவைத்திருக்கிறோம்.


எங்களுக்கு மத்திய அரசு பதவிகளில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்து ரையை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமல்படுத்த வேண்டும். சோனியாகாந்திக்கும், கலைஞருக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம் நாங்கள் உங்களோடு இருக்க விரும்பு கிறோம். எங்களை வஞ்சித்தால் தமிழ் நாட்டின் வீதிகளை யாராலும் கட்டுப் படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல் அருந்ததியி னர் இன மக்களுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடும் விரைவில் அமல்படுத்தப் பட வேண்டும். இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கவனிக்க கண்காணிப்புக் குழு ஒன்றும் அமைக்கப்படவேண்டும்.


தமுமுக அதன் பாதையில் வீரியமாக இயங்கும். ம.ம.க. அரசியல் கடமைகளை ஆற்றும். நேற்று சொன்னதை இன்றும் சொல்கிறோம் இன்ஷாஅல்லாஹ் நாளை யும் சொல்வோம். எங்களை, எங்கள் கொள்கைகளை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டுக்கள் இன்னும் அச்சடிக்கப்பட வில்லை.

முஸ்லிம் மாண‌வி சாதனை

முஸ்லிம் மாண‌வி சாதனை:-


சென்னை அறிவியல் விழா 2009 என்ற நிக‌ழ்ச்சியில் திண்டுகல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்த ஃபவுஸுல் ஹிதாயா முஸ்லிம் மாண‌வி மாநில அளவிலான அறிவியல் சார்ந்த போட்டியில் செயற்கைகோள் மாதிரி தயாரித்து சாதனை படைத்தார். போட்டியில் மாநிலத்தில் மூன்றாமிட‌ம் பெற்று பரிசுப் பெற்றுள்ளார். திண்டுகல் நாகல் நகரில் உள்ள‌ அண்ணாம‌லையார் ம‌க‌ளிர் மேல்நிலை ப‌ள்ளியில் ப‌யிலும் முஸ்லிம் மாண‌வி சென்னையில் நடந்த‌ சென்னை அறிவியல் விழா 2009 என்ற நிக‌ழ்ச்சியில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாமிட‌ம் பெற்றார்.அண்ண பல்கலைக் கழகம் சென்னை விவேகான‌ந்த‌ர் அர‌ங்கில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி. ப‌ரிச‌ளித்து சான்றித‌ழ் வ‌ழ‌ங்கினார்.இது குறித்த‌ த‌க‌வ‌ல் கிடைத்ததும் அந்த ‌மாண‌வியை தொட‌ர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து செய்திக‌ள் கேட்ட‌றிந்தோம்.இது குறித்து அந்த மாணவி கூறுகையில் பள்ளி ஆசிரியர்கள் நல்ல பாராட்டுவார்கள் ஊக்கமளிப்பார்கள் என்றார். அவர் ப‌டிக்கும் பள்ளியில் இவ‌ர் சிற‌ந்த‌ மாண‌வியாக‌வும் அதிக‌ ம‌திபெண் ‌ எடுக்கும் மாண‌வியாக‌வும் ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளின் பாராட்டுக‌ளை எப்போதும் பெற்று வ‌ருவ‌தாக‌வும் குர்‍‍‍‍‍ஆன் ஓதி தொழுகையை பேனுவதாகவும் அவ‌ர் தாயார் தெரிவித்தார்.மாணவியின் த‌ந்தை அபுல் அன்ஸர். குவைத்தில் ப‌னிபுரிகிரார். மற்றும் இறு ச‌கோத‌ரிக‌ள் உள்ள‌ன‌ர்.

Friday, February 20, 2009

தமுமுகவின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் தமிழக பட்ஜெட்டிற்கு தமுமுக வரவேற்பு


தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி
வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

தமிழக அரசின் 2009-2010 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையின் சிறப்பு அம்சங்களை வரவேற்று பாராட்டுகிறோம். குறிப்பாக உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறோம் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆயிரக்கணக்கான உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களின் காதில் நிச்சயம் தேனாய் பாய்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் உலமாக்கள், பணியாளர்கள் நலனில் சீரிய அக்கறை எடுத்து அவர்களது அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் தமுமுகவின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைப்பதாக அறிவித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் கலைஞருக்கும், நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகனுக்கும், மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆறு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பதையும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசின் அச்சாணியாக திகழும் தமிழக முதல்வர் கலைஞர் தொடர் அழுத்தங்களைக் கொடுத்து நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

Thursday, February 19, 2009

சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்ப் நிலம் மீட்பு!

சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட

ரூ.50 கோடி மதிப்பிலான 25 கிரவுண்டு வக்ப் நிலம் மீட்பு!

நமது செய்தியாளர்

தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக தமுமுக பொதுச் செயலாளர்
செ. ஹைதர் அலி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப் பேற்றார். அப்போது பத்திரிகையாளர் களை சந்தித்த அவர், ''ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் வக்ப் நிலங்களை மீட்பதுதான் எனது முதல் பணி'' என்று சூளுரைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யிருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை சேகரித்தார். அப்போது சென்னையில் கடற்கரை அருகே திருவல்லிக்கேணி யில் டாக்டர் பெசன்ட் சாலையில் திவான் சாஹிப் கபரஸ்தான் வக்புக்குச் சொந்தமான 25 கிரவுண்டு நிலம் 1917ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதும் அதை மீட்டெடுக்க நீதிமன்றங்கள் மூலம் முயற்சிக்கப்பட்டும் அது தோல்வியில் முடிந்துள்ளதும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இதனை மீட்டெடுக்கும் பணியில் வாரியத் தலைவர் தீவிரம் காட்டினார்.


இந்த வக்ப் நிலத்தில் அருணா கார்டன் என்ற பெயரில் தோட்டத்தை உருவாக்கி அதனை வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடமாக ஆக்கிரமிப் பாளர்கள் உபயோகித்து நான்கு தலை முறையாக லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். மேலும் மூன்று அடுக்கு மாடி வீட்டையும் கட்டியுள்ள னர். ஆக்கிரமிப்புக்குள்ளான நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடியாகும்.


இந்த வக்ப் நிலத்தை காலி செய்து வாரியத்திடம் ஒப்படைக்குமாறு பிறப் பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த வழக்கு கடந்த 11.02.2009 அன்று தள்ளுபடி ஆனது. இதையடுத்து வக்ப் வாரிய தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரனை தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் செயலாற்றி நிலத்தை மீட்டு வாரியத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மைலாப்பூர், திருவல்லிக்கேணி வட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரனிடம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் பகுதி காவல் துணை ஆணையரை தொடர்பு கொண்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கு மாறும் கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் காவலர்கள் துணையுடன் கடந்த 12.02.2009 அன்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் வக்ப் வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் இருந்தனர். இந்த விஷயத்தை கேள்வி யுற்ற திருவல்லிக்கேணி மற்றும் மைலாப் பூர் பகுதி தமுமுகவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த வாரியத் தலைவர், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைப் பார்வையிட்டுச் சென்றார்.

பரபரப்பான கட்டத்தில்...


பகல் 2.00 மணியளவில் அங்கு பார்க்கிங் செய்யப்பட்டிருந்த வாகனங் களை அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. நான்கு சக்கர வாகனங் களை அப்புறப்படுத்தும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 40 கார்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களின் உதவியுடன் 30 ஆட்டோக்கள், 50 இருசக்கர வாகனங் களை வக்ப் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, அங்கு கட்டப்பட்டிருந்த கூடாரங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இவையனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் குவிந்ததால் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.


இதனிடையே சுமார் ஒன்றரை கிரவுண்ட் நிலத் தில் கட்டப்பட்டிருந்த மூன்று அடுக்கு மாடியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் கோரியதால் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் 12 மணி நேரம் கால அவகாசம் வழங்கினார். இதையடுத்து அதை மட்டும் விடுத்து 23 1/2 கிரவுண்டு நிலத்திற்கான முக்கிய நுழைவு வாயிலை பூட்டி வட்டாட்சியர் சீல் வைத்தார்.

மீட்கப்பட்ட இடம் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து கடந்த 13.02.2009 அன்று காலை 10 மணியளவில் மீண்டும் வட்டாட்சியர் காவல்துறை படையுடன் அப்பகுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே திமுக கவுன்சிலர் காமராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரை சூழ்ந்து கொண்டு அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த னர். இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி தடை யாணை பெற முயன்றனர். வக்ஃப் வாரிய வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக் கவே வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.


ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர். இதற்கு முன்னர் இருந்த வக்ப் வாரிய தலைவர்கள் எடுத்த முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல ஆனது. வக்ப் இடம் இப்படி அநியாயமாக கைவிட்டுப் போகிறதே என்று நாங்கள் வருத்தத்தில் இருக்கையில் தற்போதைய வாரியத் தலைவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு இந்த நிலத்தை மீட்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். பல ஜமாஅத் பெரியவர்கள் ஒன்றுகூடி இதுகுறித்து பேசுகையில் உணர்ச்சி மிகுதியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மேலும் அவர்கள், நிலத்தை மீட்டதோடு நின்றுவிட்டால் மீண்டும் இதனை ஆக்கிரமிக்க முயற்சிப்பார்கள். எனவே இதனை முஸ்லிம்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவமனையோ, மேல் நிலைப் பள்ளியோ, ஐ.டி.ஐ. நிறுவனமோ, திருமண மண்டபமோ கட்ட வேண்டும் என்றார்கள். வேறு சிலர், இப்பகுதியில் வணிக வளாகம் கட்டினால் வக்புக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் என்றனர்.


வாரியத் தலைவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொதுமக்கள்
ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது வாரியத் தலைவராக இருந்த திருமதி. பதர் சயீத் அவர்கள் சென்னை ராயபுரம் கௌஸ் முகைதீன் பேட்டை என்கிற ஜி.எம்.பேட்டையில் உள்ள காஜி சர்வீஸ் இனாம் (எ) முகமதியர் கபரஸ்தான் வக்ஃபுக்குச் சொந்தமான நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு வக்ஃப் நிலத்தை ஒப்படைத்தார். இந்த 552 குடியிருப்பு களில் 452 குடியிருப்புக்களை மீனவர் களுக்கு ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 100 குடியிருப்புக்களையும், பெருங்குடியில் கட்டப்பட்டுள்ள 276 குடியிருப்புக் களில் 176 குடியிருப்புக்களையும் வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்கி, ஒதுக்கீடு உரிமை மற்றும் வாடகை வசூலிக்கும் உரிமையை தன் வசம் எடுத்துக் கொண்டு அதற்கான விண்ணப்பங் களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

வாரியத்தின் மற்றொரு சாதனை!
இந்த விஷயம் தன் கவனத்திற்கு வந்தபோது வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள், குடியிருப்புக் களை குடிசை மாற்று வாரியம் கட்டி யிருந்தாலும் அந்த நிலம் வக்புக்குச் சொந்தமானது என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட 100 குடியிருப்புக்கள் உட்பட 276 குடியிருப்புக்களின் ஒதுக்கீடு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் வாரியத் திற்கு ஒதுக்கக் கோரி வாரியக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். மேலும் இதுதொடர் பாக தமிழக முதல்வரையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார். வக்ஃப் வாரியத் தலை வரின் தொடர் முயற்சிகளின் பயனாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து மேற்குறிப்பிட்ட 276 குடி யிருப்புகளை வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து, இந்தக் குடியிருப்புக்களின் ஒதுக்கீட்டு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாராட்டுக்குரியவர்கள்.

இதுகுறித்து வக்ப் வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் கூறுகையில்,

''இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வக்ஃப் வாரியத்திற்கு ஆதரவாக 11.02.2009 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை களை மேற்கொண்டோம். அதன் பயனாக மறுநாளே (12.02.2009) வட்டாட்சியர் உதவியுடன் ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளோம்.

இந்த விஷயத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்களின் பணி மகத்தானதாகும். வட்டாட்சியர் மூலம் அவர் எடுத்த உறுதியான நடவடிக்கை களே ஒரே நாளில் 24 கிரவுண்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை அவர் நிரூபித்து விட்டார். (திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி திரு. கருப்பன் ஐ.ஏ.எஸ். அவர்களின் மகளாவார்).

சென்னையின் முக்கியப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்த நிலத்தை பார்த்த போது அதிர்ச்சி யடைந்து இதனை மீட்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நடவடிக்கைகளை எடுத்தேன். இந்த நிலத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தின் உதவி மிக அவசியம் எனக் கருதி யதால் தமிழ்நாட்டில் சிறந்த வழக்கறி ஞர்களில் ஒருவரான திரு. லஷ்மி நாராயணன் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைத்தேன். அவர் இந்த வழக்கை மிகுந்த ஈடுபாட்டோடு அணுகி, இந்த வழக்கில் வக்ப் வாரியத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தார். மேலும் ஆக்கிரப்பாளர்கள் தடையாணைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை அணுகியபோது அவர் அருகிலிருந்து தடையாணை கிடைக்கவிடாமல் செய்தார். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலமும், மூன்று அடுக்கு மாடி இருக்கும் இடமும் வக்ஃபுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் பதிவு செய்துள்ளது'' என்று கூறிய வாரியத் தலைவர், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீட்டை காலி செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள் ளது. இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து தடையாணை பெற முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதை முறியடிப் பதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வக்ஃப் வாரியத்தின் நன்மைக்காக திரு. லஷ்மி நாரா யணன் அவர்களை தான் நியமித்த போது அதனை சிலர் கடுமையாக விமர்சித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

thanx by

www.tmmk.in

Tuesday, February 10, 2009

சரித்திரத்தைத் தொடங்கியது மனிதநேய மக்கள் கட்சி!

சரித்திரத்தைத் தொடங்கியது மனிதநேய மக்கள் கட்சி!


மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி! மாற்று அரசியலுக் கான மாபெரும் புரட்சி!! என்ற முழக்கத்தோடு சென்னையை நோக்கி படையெடுத்தனர் சமுதாய மக்கள், இல்லை... இல்லை... தமிழக மக்கள் படையெடுத்தனர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.


பிப்ரவரி 6ஆம் தேதி மாலையில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள்தான் பயணத்தை முதலில் தொடங்கிய தகவலைத் தந்தனர். அன்று இரவு தமிழக சாலைகளில் கறுப்பு வெள்ளை கறுப்பு கொடிகளுடன் பேருந்து, வேன், கார் என வாகனங்களில் மக்கள் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது.


வழியெங்கும் உளவுத்துறையினர் வாகனங்களின் எண்ணிக்கையையும், அதில் நெரிசலுடன் நிரம்பி வழிந்த மக்களையும் கணக்கெடுத்தவாறு தங்கள் பணியைத் தொடர... ராஜ கம்பீரத்தோடு வாகனப் படையெடுப்பு சென்னையை நோக்கி நகர்ந்தது. ஆம் எல்லா சாலை களும் சென்னையை நோக்கித் திரும்பின.


விடியற்காலை 4 மணி முதல் வாகனங்கள் சென்னையை நெருங்க... ஆங்காங்கே கொட்டும் பனியில் பாது காப்புப் பணிகளை செய்து கொண்டிருந்த தமுமுக தொண்டரணியினர், வாகனங்களுக்கு வழிகாட்டத் தொடங்கினர்.


காலை 6, 7 மணிக்கெல்லாம் திருச்சிக்கு தெற்கே உள்ள மாவட்டங்களிலிருந்து வந்த வாகனங்கள் சென்னைக்குள் நுழைய,
காலையிலிருந்தே போக்குவரத்து நெரிசல் தொடங்கியது. தாம்பரத்தி­ருந்து செங்கல்பட்டு வரை கறுப்பு வெள்ளை கொடிகளுடன் வாகனங்களின் அணிவகுப்பு தொடங்கியது.


மதுராந்தகம், செங்கல்பட்டு என வரும் வழியிலேயே ஏரிகள், ஆறு களில் மக்கள் கூட்டம் இறங்கி குளிக்கத் தொடங்கியது. அங்கு நின்றிருந்த மதுக்கூரைச் சேர்ந்த ராவுத்தர்ஷா என்ற சகோதரர் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''1 நிமிடத்திற்குள் பல வண்டிகள் சாரை சாரையாகப் போவதைப் பார்க்கிறோம், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது'' என்றார்.


இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்களால் நிரம்பியது. மறுபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நந்தம்பாக்கம் வழியாக வந்த மேற்கு, வடமேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்களின் வருகையால் திணற... இந்த செய்திகள் எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.


ஒருபக்கம் தொழுகை, மறுபுறம் குளியல், எல்லாம் முடிந்தபிறகு ஊரி­ருந்து கொண்டுவந்த காலை உணவை உண்ணும் காட்சிகளை தாம்பரம் சென்னையைச் சுற்றி பரவலாகப் பார்க்க முடிந்தது.


தாம்பரத்தில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் ஏற்கெனவே திகைத்துப் போயிருந்த மக்களை மேலும் திக்கு முக்காட வைத்தது. 100 அடி பேனர்கள், காணுமிடமெல்லாம் கொடிகள், பிரம் மாண்ட வளைவுகள் என மக்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.


மகிழ்ச்சி, உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு என ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு செய்திகளை சொல்லாமல் சொல்லியது. 10 மணிக் கெல்லாம் மக்களின் ஒரு பகுதியினர் திடலுக்குள் நுழைந்தனர்.


அவர்களை வெடிகுண்டுகளைக் கண்டறியும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து தமுமுக தொண்டர்கள் உள்ளே அனுப்பினர்.


காலை பனி விலகி, சூரியன் தன் பணியை முடுக்கியது. 11.00 மணிக்கு சமூக நீதி கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கம் மிகுந்த உற்சாகத்தோடு நடக்க, செறிவுமிக்க கருத்துக்களோடு மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பி. அப்துஸ் ஸமது தலைமை யில், பேரா. ஹாஜாகனியின் ஒருங் கிணைப்போடு தொடர்ந்தது. கருத்தரங்கம் 2 மணி வரை அனல்பறத்தியது. கொஞ்சம்கூட உற்சாகம் குறையவில்லை.


அதன்பிறகு மக்கள் உணவகங்களை நோக்கிச் சென்றனர். ஏராளமானோர் ஊரிலிருந்து கொண்டுவந்திருந்த சாப்பாட்டு பொட்டலங்களைப் பிரித்து உண்ணத் தொடங்கினர்.


அவர்கள் உணவு உண்டுகொண் டிருந்த நேரம் காஞ்சி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான வாகனங்கள் தாம்பரத்தில் நுழைந்து கொண்டிருந்தன. போக்கு வரத்து செரிவால், போக்குவரத்துக் காவலர்களும் சிரமத்துடன் பணியை செய்துவந்தனர்.


தாம்பரம் மூச்சுவிட முடியாமல் திணறத் தொடங்கிய அந்த மாலை வேளையில் மனிதநேய மக்கள் கட்சி யின் தொடக்க விழா மாநாட்டின் முதல் அமர்வு மாலை 4.30 மணியளவில் தொடங்கியது.


அப்போதே திட­ன் மூன்றில் ஒரு பகுதி நிரம்ப, இதர பகுதிகளில் மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது. ஆறு வழிகளிலும் கூட்டம் வர, உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் முதல் அமர்வை மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீத் தலைமை தாங்குவார் என அறிவித்தார்.


மாணவரணியின் அனுபவங் களோடு மைக் முன்பு வந்த ஹாரூண் ரஷீத், திருக்குர்ஆன் விரிவுரையாற்ற உலமா அணி செயலாளர் யூசுப் எஸ்.பி.யை அழைத்தார். பல்வேறு சமூகங்களும் மாநாட்டிற்கு வருகை தந்திருந்ததை மனதில் கொண்டு அவரது உரை அமைந்திருந்தது.


அதன்பின்னர் வரவேற்புரை ஆற்றிய துணைச் செயலாளர் ஹாஜா கனி, தொடக்க உரையிலேயே மக்களை எழுச்சியூட்டினார். ''உணவுக் காக மானை அடித்துக் கொல்கிற பு­யைவிட, தன் குஞ்சுக்காக பருந்திடம் போராடுகிற கோழியின் வீரம் பாராட்டுக் குரியது. பண பலம், பதவி பலம், அடியாள் பலம் என அரசியலுக்கான பல்வேறு பலங்கள் தேவைப்பட்டாலும் அதையெல்லாம நம்பாமல், சத்தியத்தின் வ­மையையும், திரண்டிருக்கும் உங்களின் பலத்தையும் துணையாகக் கொண்டு மனிதநேய மக்கள் கட்சி களமிறங்குகிறது'' என்றார்.


அவரைத் தொடர்ந்து மனித உரிமைகள் அணி செயலாளர் அன்வர், மருத்துவ சேவை அணி செயலாளர் எம்.எம்.பாஷா, வர்த்தகர் அணி செயலாளர் யாஸீன், தொண்டரணிச் செயலாளர் ரபீக், மாணவர் அணி பொருளாளர் அமீன், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுலாபிதீன் ஆகியோர் ஒருவர்பின் ஒருவராக தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். உலமா அணி பொருளாளர் மவ்லவி நாசர் உமரி உருது மொழியில் ஆற்றிய கம்பீர உரை கூட்டத்தைக் கட்டிப் போட்டது.
இவர்களது உரைகள் தொடர்ந்து கொண்டே இருக்க, மறுபுறம் திடல் நிறைந்து கொண்டிருந்தது. மேடையில் தலைமை நிர்வாகிகளும், துணைச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், தலைமைக்கழகப் பேச்சாளர்கள், வெளி நாட்டுப் பிரதிநிதிகள் என அமர்ந்திருந்த குழு திடல் நிரம்பும் மக்கள் வெள்ளத்தை ரசித்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தது.


இறுதியாக, தலைமைக்கழகப் பேச்சா ளர்கள் கோவை ஜாஹிர், கோவை செய்யது ஆகியோர் தங்கள் பாணியில் தீர்மானங்களை முன்மொழிந்து பேசி வரவேற்பைப் பெற்றனர்.


போதிய நேரமில்லாததால் தலைமை யேற்ற ஹாருண் ரஷீது அவர்கள், பேச்சாளர்களை 5 நிமிடத்திற்குள் பேசி முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். மாலை 6 மணி நெருங்கும்போது 14 கோபுரங் களில் கட்டப்பட்ட ராட்சத விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிரத் தொடங்கியது.


அப்போது மேடைக்கு வாழ்த்து ரையாளர்கள் ஒருவர்பின் ஒருவராக வருகைதரத் தொடங்கினர். வெளியே வாக்கி டாக்கி கருவிகளுடன் மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் நின்ற தொண்டரணியினர் கட்டுக்கடங்காமல் திரண்ட மக்கள் வெள்ளத்தை முறைப் படுத்தத் திணறும் செய்திகள் மேடையில் இருந்த தலைவர்களை வந்தடைந்த வண்ணமிருந்தன.


தாம்பரத்தைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகன அணிவகுப்பு கள் போக்குவரத்து சிக்கலில் தவிப் பதாகவும், மக்கள் திடலுக்குள் நுழைய முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் அலறின.


மகிழ்ச்சியும் பரபரப்பும் குதூகலமிட, மேடை நிகழ்ச்சிகளும் விறுவிறுப்பாக நகர்ந்தது. மக்கள் கூட்டம் திட­ல் நிறைய நிறைய தக்பீர் முழக்கங்களும் எழும்பிய வண்ணமிருந்தன. இடையில் ஹாஜாகனி எழுதிய ம.ம.க.வின் கொள்கை விளக்கப் பாடலை ஆயிரம் விளக்கு உசேனின் மகன் அப்துல் காதர் தன் பிசிறற்ற குரலில் பாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.


மாநில துணைச் செயலாளர்கள் இஸ்மாயில், கோவை சாதிக் ஆகியோர் தீர்மானங்களை வாசிக்கும் போது மக்ரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கியது. இதனால் முதல் அமர்வு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. கடும் பனி மூட்டம் தொடங்கியதால மக்கள் அதை எதிர் கொண்டே அமர்ந்திருந்தனர்.


மக்ரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கியதும் மவ்லவி அப்துல் காதர் மிஸ்பாஹி அவர்கள் பாங்கலி முழங்கினார். அப்போது அவ்வளவு பெரிய திடலில் நிறைந்திருந்த கூட்டம் மெய் மறந்து அதை காதில் வாங்கியது. அந்த பரபரப்பான சூழலில் நிலவிய திடீர் அமைதி எல்லோருக்கு ஏதோ ஒரு வகையான உள்ளச்சத்தை ஏற்படுத்தியது.


பலர் நின்ற இடத்திலேயே தொழுதனர். பலர் தொழுகைக்கான இடத்தை நோக்கி நகர்ந்தனர். ஒளு செய்யும் பகுதி நெரிசல் ஆனது. மேடையில் இருந்தவர்கள் மேடையிலேயே தொழுதனர். அப்போது பத்திரிகையாளர் பகுதியில் இருந்த நண்பர்கள் மிகுந்த பவ்யத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.


பிறகு மாநாட்டின் இரண்டாம் அமர்வான வாழ்த்தரங்கம் தொடங்கியது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்குவார் என தமுமுக தலைவர் பேராசியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அறிவித்தார். கட்சியின் தொடக்க விழாவை உணர்த்தும் பொருட்டாக தமுமுகவின் முன்னாள் முதல் பொரு ளாளர் சையத் நிஸார் அஹ்மத் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் கறுப்பு, வெள்ளை, கறுப்பு நிற கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு தமுமுக தலைவர் கள் பத்திரிகையாளர்களுக்கு கொடியை அறிமுகப்படுத்தினர்.


இரண்டாம் அமர்வின் முதல் நபராக சென்னை வடபழனி பள்ளிவாசல் இமாம் மவ்லவி தர்வேஸ் ரஷாதி அவர்கள் அமர்க்களமான ஒரு எழுச்சியுரையை நிகழ்த்தினார். ''இந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு சீட்டு கலாச்சாரம் இன்றோடு முடிந்துவிட்டது'' என பேச, லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் அதை உணர்ச்சிகரமாக ஆமோதித்தது.


அவரைத் தொடர்ந்து பேசிய சுவாமி சுரேஷ் கானி சுவாமியின் உரை படுநேர்த்தியாக இருந்தது. ''இறைவனின் திருப்பெயரால்...'' என்ற வாசகத்தை சுட்டிக் காட்டி, இந்த மாநாட்டிற்கு ஆண்டவனே தலைமை தாங்குகிறான் என்று அவர் கூறியதும், எல்லோரின் கவனமும் அவரது பேச்சின் பக்கம் திரும்பியது. திருக்குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டி பேசிய அவர் முழு மாநாட்டையும் வசீகரித்தார் என்றால் அது மிகையாகாது.


அவரைத் தொடர்ந்து தாத்தா ரெட்டை மலை சீனிவாசனார் பேரவையின் தலைவர் எஸ்.நடராஜன் பேசினார். தலித் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியவர், தலித் இயக்கங்கள் தமுமுக விடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அஹ்லுஸ் சுன்னா ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்கள், அரசிய­ல் இறையச்சத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி கவனமுடன் செயல்பட வேண்டியதை சுட்டிக் காட்டினார்.


வாழ்த்தரங்கம் நிகழ்ந்து கொண்டிருந்த போது திடல் நிரம்பி கூட்டம் திமிறி, வெளியேயும், கூட்டம் திமிறி, அலை மோதிய பரபரப்புகள் எங்கும் பேரெழுச் சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.


இறுதியாக வாழ்த்துரை வழங்க வந்த அரசியல் விமர்சகர் வீரபாண்டியன் அவர்கள், தமுமுகவின் சேவைகளை கண்டு தான் வியந்ததைப் பட்டிய­ட்டுப் பேசி தன்னை தமுமுகவின் தீவிர ரசிகன் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார்.


வாழ்த்தரங்கம் நிறைவு பெற்று இறுதி அமர்வு தொடங்கியது. அப்போது கோவை ரபீக் எழுதிய ம.ம.க.வின் கொள்கை விளக்கப் பாடலை கோவை சாகுல் தன் வெண்கலக் குரலில் பாடி கூட்டத்தை ஆளுமை செய்தார்.


முதல் அமர்வில் நேரமில்லாததால் பேச வாய்ப்பிழந்த மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான், ஜே. அவுலியா மற்றும் மாநிலச் செயலாளர்கள் மௌலா நாசர், காஞ்சி ஜுனைத், மதுரை கௌஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தீர்மானங்களை வலியுறுத்திப் பேசிவிட்டு அமர்ந்தனர்.


இவர்களைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தீப்பொறி உரையை நிகழ்த்த, தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத் துல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் பரபரப்பான உரைகளை நிகழ்த்தினர்.


கடும் பனிப்பொழிவு ஒருபுறம் கொட்ட, மாநாட்டின் 30 சதவீத பரப்பளவை நிரப்பிய பெண்கள் கூட்டம் மெல்ல மெல்ல வெளியேறத் தொடங் கியது. குழந்தைகளால் குளிரையும், பனியையும் தாங்க முடியவில்லை. அதனால் தலைவர்களின் பேச்சுகள் அனைத்தும சுருக்கமாக முடித்துக் கொள்ளப்பட, இரவு 10.30 மணியளவில் காஞ்சி மாவட்டத் தலைவர் மீரான் நன்றியுரை கூறு. மாநாடு புதிய சரித்திரத்தை தொடங்கிய திருப்தியுடன் நிறைவடைந்தது.
அதன்பிறகு மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி தொடர்ந்து போக்கு வரத்து குறித்தும், காணாமல் போனவர் கள் குறித்தும் அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார்.


இரவு 10.45க்கு கலையத் தொடங்கிய கூட்டம் திடலை விட்டு கலைய 1 மணி நேரம் பிடித்தது. வெளியே வாகன நெரி சலால் இரவு 2 மணி வரை வாகனங்கள் வெளி யேறியபடியே இருந்தன.


தாம்பரத்தைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் ஸ்தம்பித்து நின்ற செய்தியை போக்குவரத்து காவலர்களின் வயர்லெஸ் போன்கள் அலறியபடி அறிவித்துக் கொண்டே இருந்தன.


நாம் நுழவெற்றிடங்கள்! நாம் நுழைந்து விட்டால் அவை வெற்றி இடங்கள்!
என்ற முழக்கத்தின் மீது சமுதாயமையாதவரை அழுத்தமாக தன் ஆதரவைப் பதிவு செய்துவிட்டது.

Thursday, February 5, 2009

தமுமுகவால் இயக்கப்படும் முழு நேர பிரச்சார வாகனம்



தாம்பரம் நகர தமுமுகவால் இயக்கப்படும் முழு நேர பிரச்சார வாகனம்

Wednesday, February 4, 2009

தாய்க்கழகம் அழைக்கிறது சமுதாயமே திரண்டு வா...! சமுதாயக் கண்மணிகளே...

தாய்க்கழகம் அழைக்கிறது சமுதாயமே திரண்டு வா...!
சமுதாயக் கண்மணிகளே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நீங்களெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கும்
வேளையில் இக்கடிதத்தை வரைகிறேன். அடர்த்தியான பணிகளின்
காரணமாகவும், தொடர்ச்சியான பயணங்களின் காரணமாகவும் எழுத
முடியவில்லை.

ஆனால், அதே காரணத்தை இப்போதும் சொல்ல முடியாதல்லவா...!
வரலாற்று திருப்புமுனைக்காக நீங்க ளெல்லாம் அல்லும் பகலும் பாடுபட்டுக்
கொண்டிருக்கும் போது உங்களையெல்லாம் உற்சாகப்படுத்துவது எங்களின்
அவசிய பணியல்லவா...!

பிப்ரவரி 7 எப்போது வரும்? நமது தலைவர்களையும் சொந்தங்களையும்
வொருசேர தாம்பரத்தில் காணும் நிமிடங்கள் எப்போது மலரும்? என்றெல்லாம்
நினைத்து நினைத்து பூரிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் உங்களைக்
காணும் பேராவலில் நாங்களும் உள்ளோம்.

கண்மணிகளே...

1995ல் நாம் தமுமுகவை தொடங்கிய போது இவ்வளவு தூரம்
பயணிப்போம் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? எத்தனை சிறைகள்,
எத்தனைக் கொடுமைகள், அத்தனைகளையும் எதிர் கொண்டு... புயலை
உரசி, இடிகளை உள்வாங்கி இன்று இமயமாய் உயர்ந்திருக்கிறோம்.
அல்ஹம்தலில்லாஹ்.

இந்த இயக்கத்திலே, சமுதாய நீரோட்டத்திலே இணைந்ததற்காக எவ்வளவு
எதிர்ப்புகளை எதிர்கொண்டோம் என்பதை எண்ணிப் பார்க்கின்றபோது
இதையெல்லாம் நாம்தான் நிகழ்த்தி னோமோ என்ற ஆச்சரியம் மேலிடு
கிறது.

எல்லாம் வல்ல இறைவனல்லவா நம்மை இயக்கியிருக்கிறான்!!

குடும்பத்தைப் பகைத்தவர்கள், முதலாளிகளை எதிர்த்தவர்கள், இயக்கப்
போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக வேலையை இழந்தவர்கள், வெளிநாட்டு
வாய்ப்புகளை பறிகொடுத்தவர்கள், அரச வன்முறைகளால் உடல்
காயங்களைப் பெற்றவர்கள் என்று தியாகிகளின் பாசறையாய் தமுமுக
இருக்கிறது.

அதனால்தான் நம்மை யாராலும் அழிக்க முடியவில்லை. அழிக்க
நினைத்தவர்கள் பின்னாளிலே நம்மை வளர்க்க முனைந்தார்கள். நம்மை
வளைக்க நினைத்தவர்கள் அது முடியாததால் நம்மோடு அரசியல்
அணியிலே இணைந்தார்கள். அல்லது தம்மையும் இணைத்துக் கொண்டார்
கள். ஆம், வரலாற்றை அதன் போக்கில் அல்ல, நமது போக்கிலே
வடிவமைத்த திறமை நமக்கு உண்டு. அல்ஹம்துலில்லாஹ்!

13 ஆண்டுகளாக நாம் ஆற்றிய பணிகள் தமிழகத்தில் எவரும் செய்யாதது.
செய்ய முடியாததன்றோ...!
• அவசர ரத்த தான சேவையில் முதல் நிலை
• 54 ஆம்புலன்ஸ்களோடு உயிர் காப்பு பணி
• மரங்களை நட்டு சுற்றுச் சூழலை பாதுகாத்தல்
• கல்வி உதவிகள், விழிப்புணர்ச்சி கருத்தரங்குகள் என நாம்
ஆற்றிய, ஆற்றி வருகின்ற பணிகள் முஸ்லிம் சமுதாயத்தின்
கண்ணியத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது.

தனிமைப்படுத்தப்பட்ட நமது சமுதாயத்தை, தரணி போற்றும் வகை யில்
தகுதி கொண்டதாக மாற்றியமைத்த சாதனை நமது இயக்கத்தையே சாரும்.
கண்மணிகளே...

வொடுக்கப்பட்ட நமது குரலை நாம் நடத்திய போராட்டங்கள் வீரியமாய்
வொலிக்கச் செய்தன. அதன் விளைவு தீர்க்கப்படாத நமது பிரச்சினைகள்
தீர்வுக்கு வந்தன.
 1999ல் வாழ்வுரிமை மாநாடு
 2004ல் தஞ்சை பேரணி
 2007ல் டெல்LEE பேரணி
இவையெல்லாம் உரிமைப் போரில் நாம் பதித்த வரலாற்றுத் தடங்கள்.
இதை எண்ணி எண்ணி சமுதாயம் அகமகிழ்கிறது.

உச்சக்கட்டமாக நமது இலட்சியக் கோரிக்கைகளில் முதன்மையானதாக
தமிழக அளவிலான இடவொதுக்கீட்டை 3.5 சதவீதம் என்ற அளவிலே நாம்
வெற்றிகரமாக, இந்த சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுத்த போது நம்மை
இந்த சமுதாயம் மார்போடு அணைத்ததை நாம் கண்டோம், களித்தோம்.

நாம் அரியணை ஏற்றிய திமுக அரசி டம் வாக்குகளை கொடுத்து
உரிமையைப் பெற்றோம். சமுதாயத்திற்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றிய நிம்மதி கிடைத்தது.

அப்போதுதான் சமுதாயத்தின் அறிவு ஜீவிகளிடமிருந்து மட்டுமே வந்த வொரு
கோரிக்கை மக்கள் மன்றத்திடமிருந்தும் நமக்கு வந்தது.

நேரடி அரசியலில் இறங்காமலேயே வெற்றிகளைக் குவிக்கும் தமுமுக, ஏன்
மார்க்க, சமுதாயப் பணிகளோடு அரசியல் பணியையும் கையிலெடுக்கக்
கூடாது என்ற அந்தக் கேள்வி நூற்றுக்கணக் கிலே எழும்பி, அது ஆயிரம்,
லட்சம் என்று நம்மை உலுக்கியது.

ஜமாஅத்துகள், சங்கங்கள் பெயரில் நமக்கு உரிமையான நிர்பந்தங்கள்
வேறு! பொது நிகழ்ச்சிகளில் நம்மைச் சுற்றி முற்றுகை வேறு! இப்படி
சமுதாய நிர்பந் தங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமே பட்டாசு
சப்தங்களாய் வெடித்தன.

அதன்பிறகே ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில்
நடைபெற்ற பொதுக்குழுவிலே அரசியல் கட்சியை உருவாக்கும் முடிவுக்கு
நமது சமுதாயக் கண்மணிகளாகிய நீங்கள் வொப்புதல் வழங்கினீர்கள்.

பலகட்ட ஆய்வுகள், பலதரப்பட்ட ஆலோசனைகளை உள்வாங்கி நமது
தலைமை நிர்வாகக்குழு நிதானமாய் திட்டங்களைத் தீட்டியது.
o நமது உயிரோட்டமாய், ரத்த ��"ட்டமாய் இருக்கும் தமுமுகவின்
இன்றைய பணிகளுக்கு பாதிப்பு வரக் கூடாது.
o நமது மார்க்க பணிகளுக்கு ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது.
o சமரசமற்ற போராட்டங்களில் வீரியம் குறையக் கூடாது. என்ற
எண்ணங்களின்படி தமுமுக அதே வீரியத்தோடு அதே பாதையில்
பயணிக்கும். அதன் அரசியல் அமைப்பாக மனிதநேய மக்கள் கட்சியை
உருவாக்குகிறோம் என அறிவித்தோம்.
நமது இந்த முடிவை சர்க்கரைப் பொங்கலாய் சமுதாயம் வரவேற்றது.
இயக்கவாதிகளோ சர்க்கரைக் கிடங்கில் விழுந்த தேனியின் மகிழ்ச்சியோடு
வரவேற்றார்கள்.

நமது அடிப்படை லட்சியங்களில், கொள்கைகளில் சமரசம் கூடாது. அதற்கு
தமுமுக இயங்குவதுதான் நல்லது. துணையாக அரசியல் கட்சி மலரட்டும்
என்ற அவர்களது எண்ணங்களை தலைமை நிறைவேற்றிய மகிழ்ச்சியில்
திளைத்தார்கள்.

கண்மணிகளே...

டிசம்பர் 7, 2008 அன்றுதான் ''பணிகளைத் தொடங்குக..'' என்று
அறிவிப்பு கொடுத்தோம். ஜனவரி 4, 2009 அன்று திருச்சியில் கூடிய
பொதுக்குழுவுக்குப் பின்னர் பணிகள் சூடுபிடித்தன.

இன்றோ, தமிழகத்தில் நமது விளம்பரங்களே இல்லாத இடங்கள் இல்லை
என்று சொல்லுமளவுக்கு கழகத்தின் போர் வீரர்களாகிய நீங்கள்
(தொண்டர்கள்) அசத்தி விட்டீர்கள்.

டிஜிட்டல் பேனர்கள் என்ன? சுவர் விளம்பரங்கள் என்ன? வகைவகை யான
துண்டுப் பிரசுரங்கள் என்ன? வண்ண சுவரொட்டிகள் என்ன? இப்படி என்ன..
என்ன... என்ன... என்று எண்ணி பெருமூச்சு விடுமளவுக்கு பல வடிவ
விளம்பரங்களைப் பார்க்கும் நண்பர்கள் எங்களுக்கு தொலைபேசி யிலே
தெரிவிக்கும் போது நாங்களெல்லாம் இறைவன் புகழைப் பாடி அவனையே
துதிக்கிறோம்.

இப்படிப்பட்ட தொண்டர்கள், தோழர்களை, ஊழியர்களை எங்க ளுக்குத்
தந்த இறைவனைத்தானே நாம் போற்ற முடியும்!

உங்கள் அளவுக்கு இல்லாவிடிலும் தலைமையின் சார்பிலே நாங்களும்
விளம்பரங்களை செய்கிறோம், நாளிதழ் கள், வார இதழ்கள்,
வாரமிருமுறை இதழ்கள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள்
என பரபரப்பை கூட்டியிருக்கிறோம்.

என்ன இருந்தாலும் உங்களோடு எங்களால் வோரளவுக்குத்தானே போட்டி போட
முடியும்?

கண்மணிகளே...

நேரமில்லை, வோய்வில்லை, உறக்க மில்லை. வோடிக்கொண்டே
உழைக்கிறோம், உழைத்துக் கொண்டே வோடுகிறோம். வாகனங்களிலேயே
உறங்குகிறோம். சிறிது வோய்வெடுக்கிறோம்.

எல்லாம் சமுதாயத்திற்காக... சமுதாய நலனிற்காக... இதற்கான கூlee
நமக்கு இறைவனிடம் இருக்கிறது என்பதை மட்டும் மறவாதீர்கள்.

பேருந்து, வேன், கார் என முன் பதிவுகள் தொடங்கி நாட்களாகி விட்டது.
கோவை மாவட்டம் சார்பில் வாகனங்கள் மட்டுமின்றி ''மனிதநேய
எக்ஸ்பிரஸ்'' என்ற பெயரில் வாடகை ரயிலையே பிடித்து விட்டார்கள்.

இனி பதிவு செய்வதற்கு பேருந்துகளே இல்லையாம். கவலையுடன் புகார்
கூறுகிறார்கள் தொண்டர்கள்.

கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

வாகனங்களின் எண்ணிக்கையும் மக்களின் வருகைப் பதிவும் நாமே எதிர்
பார்க்காத வகையில் பிரமிப்பூட்டுகிறது. ஜனவரி 3 அன்று செயற்குழுவில்
மாவட்ட நிர்வாகிகள் அளித்த பட்டியலை வொப்பிடும் போது அது பலமடங்கு
உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் உங்களின் அயராத உழைப்புதான்
என்பதில் ஐயமில்லை, ஐயமில்லை.

கண்மணிகளே...

மக்கள் வொன்றை புரிந்த கொண்டி ருக்கிறார்கள். சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் குரல் கொடுக்க நேர்மையான, துணிச்சலான பிரதிநிதிகள்
தேவை. இப்போது அந்த வெற்றிடத்தை வெற்றி இடங்களாக மாற்றும்
ஆற்றல் தமுமுகவிற்கே உண்டு என உறுதியாக நம்புகிறார்கள். அந்த
நம்பிக்கை தான் மக்கள் வெள்ளமாக திரளப் போகிறது. சென்னையின்
நுழைவாயிலாம் தாம்பரம் திணறப் போகிறது.

கண்மணிகளே...

வாகனங்கள் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தால் வாகனங்கள்
கிடைக்க வில்லையே என்ற உற்சாகம் கலந்த புலம்பலும் நமது காதில்
விழுகிறது. எது எப்படியோ... புறப்பட தயாரானவர்கள் யாரும் வராமல்
தவறிவிடக் கூடாது. நெல்மணிகளை அள்ளுவது போல் அவர்களை
யெல்லாம் அணைத்து, இணைத்து திரட்டிவருவது உங்கள் பொறுப்பாகும்.

கண்மணிகளே...

இக்கடிதத்தைப் படிக்கும் போது நமது ஆயத்தப் பணிகள் உச்சக்கட்டத்தில்
இருக்கும் என கருதுகிறேன்.

வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தாங்கள் கலந்துகொள்ள முடிய
வில்லையே... என அங்க லாய்க்கிறார்கள். அவர்களுக் காகவே நமது கழக
இணையதளத்தில் மாநாட்டு நிகழ்வுகளை நேரடி வொளிபரப்பு செய்ய
உள்ளோம். அது அவர்களது ஆவலை ஏக்கத்தை ரளவாவது போக்கும்
என்று நம்புவோமாக.

நமது பணியில் அணியில் எப்போதும் பேராதரவாக இருக்கும் ஜமாஅத்தார்
களை மறவாமல் அழைத்து வாருங்கள். பெண்களை பாதுகாப்போடு கூட்டி
வாருங்கள். மாணவர்களையும் இளைஞர் களையும் அழைத்து வாருங்கள்
என்று சொல்ல வேண்டியதில்லை. அது இயல்பாகவே திரளக்கூடியது.

வாருங்கள், வாருங்கள். சமுதாய எழுச்சியால் பேரின்பத்தோடு பங்கெடுக்க
��"டி வாருங்கள் என்று வீடு வீடாகச் சென்று கடைசி நேர பணிகளை கச்சித
மாக நிறைவேற்றுங்கள். வரும்போது வாகனங்களின் வேகத்தில் போட்டா
போட்டி வேண்டாம் என்றும் இங்கே அக்கறையுடன் குறிப்பிட
விரும்புகிறோம்.

கண்மணிகளே...

தஹஜ்ஜத் தொழுதுவிட்டு அல்லது சுப்ஹு தொழுதுவிட்டு மாநாட்டின்
வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் கண்மணிகள் ஏராளம். அல்லாஹ்வின்
உதவியும், திருப்தியும்தான் நமக்கு வலுவான உதவியாக இருக்க இயலும்.
மாநாடு வெற்றி பெறுவதற்கு, நமது வொற்றுமை மேலும் வ¬மைப் பெறுவ
தற்கும், நமது இலட்சியத்தை அடை வதற்கும் தஹஜ்ஜத், சுபுஹு உட்பட
வொவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ் விடம் கையேந்துவோம்.

கண்மணிகளே...

மடலை நிறைவு செய்கிறேன். வொன்றை மட்டும் கூறிவிட்டு கடைசியாக
வொரே வரி, வொற்றை வரி. அதுதான் நமது அழைப்பின் முகவரி என்ற
அளவில் வொன்றை பிரகடனப்படுத்துங்கள்.

அஃது ''தாய்க்கழகம் அழைக்கிறது... சமுதாயமே திரண்டு வா...''
என்பதாகும்.
அன்புடன்

எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

Tuesday, February 3, 2009

பிப்ரவரி 7ல் துவங்குகிறது தமுமுக பேராதரவுடன் மனிதநேய மக்கள் கட்சி!

பிப்ரவரி 7ல் துவங்குகிறது தமுமுக பேராதரவுடன்

மனிதநேய மக்கள் கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் இன்று சென்னையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவுடன் தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்யப்பட்ட அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்கவிழா மாநாடு வரும் பிப்ரவரி 7 அன்று சென்னை அருகே தாம்பரத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து சமூக சேவை அமைப்பாக செயல்படும்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது மற்றும் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது

புதிதாக தொடங்கப்படவுள்ள மனிதநேய மக்கள் கட்சி சிறுபான்மையினர் மட்டும் அல்லது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் வலிமையாக பாடுபடும் அமைப்பாக செயல்படும். இந்த அமைப்பில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் செயல்படலாம், அரசியல்தளத்தில் புறக்கணிக்கப்படும் ஒழுக்க நெறிகளை கட்டிக்காக்கும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி செயல்படும். அரசியல் வாழ்வில் தூய்மையான நெறிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு தூய்மையான சேவையை ஆற்ற இயலும் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் மனிதநேய மக்கள் கட்சி இயங்கும்.

தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெறும் மாநாட்டின் ஒரு பகுதியாக காலையில் சமுக நீதி கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில் பேராசிரியர் மார்க்ஸ், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகிர், அருட்திரு ஆனந்த், கஜேந்திரன் மற்றூம் தேவநேயன் ஆகியோர் பங்கு கொள்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு துவங்கும் மாநாட்டில் மாநாட்டு திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாளருமான சையத் நிஸார் அஹ்மது அவர்கள் கொடியேற்றுவார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல் அரங்கில் தமுமுகவின் துணைச் செயலாளர்கள் மற்றும் அணி செயலாளர்கள் மாநாட்டின் தீர்மானங்கள் முன்மொழிந்து உரை நிகழ்த்துகின்றனர். பின்னர் நடைபெறும் வாழ்த்தரங்கில் மவ்லவி டி.ஜே.எம். சலாஹுத்தீன், பேராயர் எஸ்றா சற்குணம், எஸ்.என். நடராஜன், திரு. வீரபாண்டியன், முனைவர் தவத்திரு சங்கர் சுவாமி காணி, மவ்லவி முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் புதிய அரசியல் கட்சியை வாழ்த்தி உரையாற்றுகிறார்கள். பிறகு நடைபெறும் அரங்கில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிபாயி, செயலாளர்கள் அன்சாரி, உமர், ஜுனைத், முஹம்மது கவுஸ், நாசர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மாநாடு நடைபெறுகின்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது முதல் அமர்வுக்கு தலைமை தாங்குகிறார்.

மாநாட்டின் மேடை டெல்லி செங்கோட்டை வடிவத்தில் தயாராகி வருகின்றது. தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த மாநாட்டில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.’’
பேட்டியின் போது தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் பி. அப்துஸ் ஸமது, எம். தமிமுன் அன்சாரி, மௌலா நாசர், துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத், டி.ஏ. இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.