Thursday, December 1, 2016

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் 11 to 13



#தீர்மானம்_11 - "கோவை"

இந்துமுன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலையை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அந்தப் படுகொலையைத் தொடர்ந்து முஸ்லிம்களின் நிறுவனங்களையும், சொத்துக்களையும் குறிவைத்து நடத்தப்பட்டக் கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. கலவரக்காரர்களைக் கைது செய்த காவல்துறை, கலவரத்தைத் தூண்டிவிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_12 - "அரபி- உருது"

தமிழகப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரபி, உருது ஆசிரியர் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன. பல இடங்களில் அந்தப் பணியிடங்களை நீக்கும் செயல்களும் நடந்து வருகின்றன. சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அரபித் துறை மூடப்பட்டுள்ளது. இது கவலைக்குரியது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அரபி, உருது ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

#தீர்மானம்_13 - "SLET தேர்வு"

கல்லூரி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் ( SLET) தொடர்ச்சியாக அரபி, உருது மொழிப்பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. SLET தேர்வுகள் அரபி, உருது மொழிகளுக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என்றும், சிறுபான்மை மொழிகளை வஞ்சிக்கும் முறை தொடரக் கூடாதென்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. சமீபத்தில் வெளியான SLET தேர்வு முடிவுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் தேர்வு முடிவுகள் திருத்தப்பட வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது.



No comments :